தாம்பத்திய வாழ்வு எப்போதும் நேர்மறையாக அமைந்துவிடுவதில்லை. வன்மம், கோபம், தாபம், சண்டை, வெறுப்பு என பல உணர்ச்சிகள் அந்த உறவுக்குள் வந்து செல்லும். சிலர் ஏமாற்றிவிட்டு மனம் மாறி தன் வாழ்க்கைத் துணையே சரணம் என திரும்பி செல்வார்கள். சிலர் விட்டு விலகுவார்கள். அப்படி நம் வாசகி கேட்கும் கேள்விக்கு பதிலை காணலாம்.
கேள்வி: " என் கணவர் என்னை ஏமாற்றியதை கண்டுபிடித்து விட்டேன். இப்போது எங்களுக்கு இடையேயான உறவை பழையபடி மாற்றிக் கொள்ள அவர் விரும்புகிறார். சுற்றுலா அழைத்துச் செல்வது, உணவகத்தில் இரவு உணவு எடுத்துக் கொள்வது, அவ்வப்போது உரையாடல்கள், சில முத்தங்கள் என ஆளே மாறிவிட்டார்.
இதையெல்லாம் முன்பு அவர் செய்ததில்லை. அவர் என்னை ஏமாற்றிய உண்மையை நான் அறிந்ததால் இதை செய்கிறாரோ என்று எனக்கு தோன்றுகிறது. இதைப் பற்றி நான் அதிகமாக யோசிக்க தொடங்கி விட்டேன் இப்போது நான் என்ன செய்ய வேண்டும்"என முடித்திருக்கிறார்.
நிபுணரின் பதில்:" இது மாதிரியான சூழ்நிலை அதிகம் சிந்திக்க வைப்பது இயல்புதான். நம்மை கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள் திடீரென அன்பு மழை பொழியும்போது மனம் சற்று குழம்பி போகிறது. உங்கள் கணவர் விஷயங்களை மேலோட்டாகமாக மட்டுமே காண்கிறார். உங்களை ஏமாற்றியதை குறித்த குற்ற உணர்வினால் அவர் மாறியிருக்கலாம். உண்மையில் அவருடைய தவறை சரி செய்ய அவர் விரும்பினால் இந்த முயற்சிகளை மனதார செய்வார்.
இதில் உங்களுடைய ஓவர் திங்கிங் எந்த பலனையும் அளிக்காது. உண்மையிலே உங்களுடைய கணவர் உங்களை நேசித்திருந்தால் இந்த முயற்சிகள் தற்காலிகமானதாக மட்டும் இருக்காது. இனியும் தொடரும். உங்களுடைய குழப்பத்திற்கு காரணம் ஏமாற்றியதற்கு பிறகு அவர் இப்படி நடந்து கொள்வதுதானே... சில வாரங்கள்.. அல்லது சில மாதங்கள் காத்திருங்கள். அவர் உண்மையில் மாறியிருந்தால் அவர் செயல்களே அதை காட்டி கொடுக்கும்.
இதையும் படிங்க: உடலுறவுக்கு முன் ஃபோர்பிளே... துணையுடன் 'ஜாலி' பண்ண.. சில டிப்ஸ்
அவர் உங்களை ஏமாற்றியது ஏதேனும் சூழல் காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்காக அவர் உங்களை விட்டு விலகவோ, உங்களை இழக்கவோ விரும்பவில்லை என்பது அவருடைய மெனக்கெடல்களில் தெரிகிறது. ஒருவேளை உங்களுக்கு உண்மை தெரிந்த பதற்றத்தில் அவர் இதையெல்லாம் செய்திருந்தால் தனது குற்றத்தைத் தணிக்க மட்டுமே முயற்சி செய்கிறார். கொஞ்ச நாள்களில் அதை கைவிடலாம்.