ஆண்களே மன்மதக்கலை அறிந்தால் மட்டும் போதாது... இதுவும் தெரியணும்.. உடலுறவுக்கு பின் உஷார்..!

First Published | Mar 6, 2023, 3:09 PM IST

ஆண்களின் அந்தரங்க உறுப்பை முறையாக பராமரிக்காவிட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். 

ஆண்களின் அந்தரங்க உறுப்பின் சுகாதாரம் முக்கியமானது. அதிக உணர்திறன் கொண்ட உறுப்பு இது. அதன் சுகாதாரத்தை கடைப்பிடிக்க தவறினால் பல பிரச்சனைகள் ஏற்படும். இந்த ஆணுறுப்பு எல்லா பருவ காலங்களிலும் ஒரே போல காணப்படாது. வெயில், குளிர், அறையின் வெப்பநிலை, மனநிலை உடல் ஆரோக்கியம் போன்றவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு அளவில் ஆணுறுப்பு மாறுவது இயல்பாக கூறப்படுகிறது.

சிலர் தூங்கி விழிக்கும்போது ஆணுறுப்பு விரைப்பு தன்மையுடன் பெரிதாக இருப்பதை பார்த்திருக்கலாம். இதனை எதிர்விளைவு விரைப்புத்தன்மை (Reflex Erection) என்கிறார்கள். சிறுநீர்ப்பையில் ரொம்ப சிறுநீர் பெருகி அது பெரிதாவதால் அதன் பக்கவிளைவாக ஆணுறுப்புக்கும் அதிக ரத்த ஓட்டம் பாய்ந்து விரைத்து காணப்படுகிறது. சிலர் பெரிய ஆணுறுப்பு தான் துணைக்கு உச்சக்கட்டம் தரும் என சொல்வது மூட நம்பிக்கை. ஆணுறுப்பின் அளவுக்கு அதற்கும் பெரிய சம்பந்தம் இல்லை. இங்கு ஆணுறுப்பின் சுகாதார விஷயங்களை காணலாம். 


ஆணுறுப்பின் மீது காணப்படும் பாக்டீரியாக்களை சுத்தப்படுத்துவது கட்டாயம். இதற்காக வேதிப்பொருட்கள் குறைவாக உள்ள மிதமான சோப்பை பயன்படுத்துங்கள். மேலும் ஆணுறுப்பின் மீது காணப்படும் முடிகளை குறிப்பிட்ட இடைவெளியில் நீக்கம் செய்வது முக்கியம். ஏனெனில் அங்கு முடிகள் அதிகம் இருந்தால் வேர்வை வெளியேறும். இதனால் பாக்டீரியாக்கள் தேங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். வாய் வழி உறவுக்கும் இது இடையூறுதான்... 

உடலுறவுக்கு முன்னும் பின்னும் ஆணுறுப்பை சுத்தம் செய்ய வேண்டும். ஆணுறுப்பை சோப்பு பயன்படுத்தி கழுவலாம் அல்லது குளித்து விடலாம். எப்போதும் தளர்வான உள்ளாடைகளை அணிய வேண்டும் அப்போதுதான் ஆணுறுப்பு பகுதியில் வியர்வை குறைவாக இருக்கும் தூங்கும் போது உள்ளாடைகளை கழற்றிவிட்டு தூங்குவது நல்லது. உள்ளாடைகளை வெந்நீரில் அலசுவது நல்லது. சோப்பு பயன்படுத்தி துவைத்த பிறகு வெந்நீரில் அலசி (வாய்ப்பிருந்தால்) வெயில் காய போடுவதால் (கட்டாயம்) பாக்டீரியாக்கள் அண்டாது. உடலுறவில் அதிக சுத்தம் எதிர்பார்ப்பார்கள் பெண்கள்... 

ஒரு ஆண் உடலுறவு கொள்ளும் போது வெளியாகும் உயிரணுக்களை விடவும் சுய இன்பத்தில் மிகக் குறைந்த உயிரணுக்கள் தான் வெளிப்படும். ஆனாலும் ஆணுறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள சுய இன்பம் செய்த பின்பும் அந்தப் பகுதியை கழுவுவது அவசியம்.

இதையும் படிங்க: செக்ஸ் வாழ்க்கையில் இதை செய்யாவிட்டால், விவாகரத்து கூட ஆகலாம்.. உங்கள் துணை என்ன எதிர்பார்க்கிறார் தெரியுமா?

விருப்பப்பட்ட நேரத்தில் சுய இன்பம், விரும்பியவரோடு உடலுறவு என ஆணுறுப்பை இஷ்டத்திற்கு பயன்படுத்திவிட்டு சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால் சரும அழற்சி, சீழ் ஒழுகுதல், இரத்த காயங்கள் மாதிரியான பிரச்சனை வரும். அந்த நேரத்தில் மருத்துவரின் ஆலோசனையை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும். 

இதையும் படிங்க: செக்ஸ் வைத்த பிறகு ஏன் முரட்டு தூக்கம் வருது.. ஒருவேளை இந்த காரணமா இருக்குமோ?

Latest Videos

click me!