பாலியல் இன்பத்தை அதிகரிக்கும் லூப்ரிகண்டை தேர்வு செய்வது எப்படி..?

First Published | Mar 7, 2023, 3:41 PM IST

உடலுறவுக்கான சரியான லூப்ரிகண்டை தேர்வு செய்வது பாலியல் ஆரோக்கியத்திலும் பெரிய வித்தியாசத்தைக் கொண்டுவரும். உங்களுக்கு சரியான வகையில் பொருந்தக்கூடிய லூப்ரிகண்டை வாங்கும் போது தவிர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
 

பாலியல் இன்பத்துக்கு வலு சேர்ப்பதாக கருதப்படக்கூடிய லூப்ஸ் என்கிற லூப்ரீகண்டுகள் மொத்தம் மூன்று வகைப்படுகின்றன. அவை நீர் சார்ந்த லூப்ரீகண்ட், சிலிகான் அடிப்படையிலான லூப்ரீகண்ட் மற்றும் எண்ணெய் அடிப்படையிலான லூப்ஸ் ஆகும். நீர் சார்ந்த லூப் மிகவும் பொதுவானது மற்றும் பரவலாகக் கிடைக்கிறது. பெரும்பாலும், இதை ஆண்கள் ஆணுறை அணியும் போது பயன்படுத்துகின்றனர். ஒருசிலர் செக்ஸ் டாயிஸ் கொண்டு பாலியல் இன்பம் தேடும் போது பயன்படுத்தப்படுவதும் உண்டு. இது பயன்படுத்துவதற்கும் எலிமையாக இருக்கும் மற்றும் பாதுகாப்பானது என்று பலரும் கருத்து கூறுகின்றனர். அதுதவிர சுத்தம் செய்வதற்கு எளிதானது மற்றும் கறை படியாது என்பதும் பொதுவான கருத்தாக பல பயனாளர்கள் முன்வைக்கின்றனர். 

சிலிகான் அடிப்படையிலான லூப் நீண்ட காலம் வரும். அதிக வழுக்கும் மற்றும் ஆணுறைகளுடன் பயன்படுத்த பாதுகாப்பானது. ஆனால் இதை செக்ஸ் டாயிஸுடன் பயன்படுத்த முடியாது. அதேபோன்று ஆணுறைகளுடன் எண்ணெய் சார்ந்த லூப்கள் பயன்படுத்தப்படுவது கிடையாது. அது விரைவாகவே உடைந்து போகலாம் என்பதால், பரிந்துரைக்கப்படுவது இல்லை. அதேபோன்று பெண்ணுறுப்புகளிலும் இதை பயன்படுத்த முடியாது. ஏனெனில் இது தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.

சேர்மானம்

லூப்ஸ் குறித்து முழுவதுமாக தெரிந்துகொள்ள, அதனுடைய லேபிளில் இருக்கும் பொருட்களை படிப்பது அவசியம். அப்போது தான் அதை பாதுகாப்பான முறையில் பயன்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, nonoxynol-9 என்கிற பொருள் சேர்க்கப்பட்ட லூப்ஸை எப்போதும் பயன்படுத்தக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அது எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளின் ஆபத்தை அதிகரிக்கும் என்று மருத்துவ உலகம் கருத்து தெரிவித்துள்ளது. ஒருசிலருக்கு இந்த பொருளால் ஒவ்வாமை கூட வர வாய்ப்புள்ளது. எனவே, எந்த லூப்ஸையும் பயன்படுத்துவதற்கு முன்னர், உங்களுடைய தோலில் மீது அதை தடவிப் பாருங்கள். குறைந்தது 5 நிமிடங்கள் வரை, அதனால் எந்த பிரச்னையுமில்லை என்றால், கவலை வேண்டாம்.
 

Tap to resize

பி.எச். இருப்பு

பெண்ணுறுப்புகள் ஏற்கனவே இயற்கையான முறையில் சமநிலையை கொண்டுள்ளன. அதனால் யோனி பகுதியை சுற்றியும் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் பொதுவாக இருக்கும். அதிக அமிலம் அல்லது காரத்தன்மை கொண்ட லூப் பயன்படுத்தினால் இந்த சமநிலையை சீர்குலைத்து நோய்த்தொற்றின் அபாயத்தை அதிகரிக்கும். அதனால் எப்போதும் பெண்ணுறுப்பின் முக்கியத்துவத்தை கருதி பிரேத்யேகமாக தயாரிக்கப்பட்ட பி.எச் சமநிலை கொண்ட லூப்பை தேர்வு செய்வது நல்லது.
 

நிலைத்தன்மை

வெவ்வேறு வகையான லூப்களுக்கு, வெவ்வேறு விதமான நிலைத்தன்மை இருக்கும். உங்களுக்கும் உங்கள் பார்டனருக்கும் எந்தவிதமான நிலைத்தன்மை கொண்ட லூப்கள் சிறப்பாக இருக்கும் என்பதை கவனியுங்கள். எடுத்துக்காட்டாக கனமான தன்மை கொண்ட லூப் நீண்ட நேர உடலுறவுக்கு சிறந்ததாக இருக்கும்.   
ஆனால் மெல்லிய தன்மை கொண்ட லூப், பெண்களின் பிறப்புறுப்பு பகுதிக்கு சிறப்பாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நம்பமுடிகிறதா? பாலியல் ஹார்மோனை ஆரோக்கியமாக்கும் கோகோ கோலா மற்றும் பெப்சி..!!

தனிப்பட்ட தேர்வுகள்

நீங்கள் தேர்ந்தெடுக்கும் லூப் நன்றாக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் பாலியல் அனுபவத்தை மேம்படுத்த வேண்டும். சிலர் மணமற்ற மற்றும் சுவையற்ற லூப்களை விரும்புகிறார்கள், மற்றவர்கள் சுவையான லூபை விரும்புகிறார்கள். உங்கள் தனிப்பட்ட விருப்பங்களையும், உங்களுக்கும் உங்கள் பார்டன்ருக்கும் எது மிகவும் வசதியாக இருக்கும் என்பதையும் கவனித்து லூப் வாங்குங்கள். 
 

Latest Videos

click me!