செக்ஸ் சாதாரணமா கிடைக்காது..இந்த கேள்விகளுக்கு பதில் இருந்தால்.. தாரளமா செக்ஸ் வச்சிக்கோங்க..!

First Published | Mar 7, 2023, 6:16 PM IST

உடலுறவு வைத்து கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்பதை எப்படி அறிந்து கொள்ளலாம்... 

உடலுறவு கொள்வது பெரிய விஷயம். அதிலும் முதல்முறை என்றால் சொல்லவே வேண்டாம். ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். அதற்கு மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் தயாராக இருக்க வேண்டும். செக்ஸ் உறவில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மனம் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் உடலுறவு கொள்ள தயாரா? இல்லையா? என்பதை பின்வரும் கேள்விகளை கேட்டு கொள்ளுங்கள். 

செக்ஸ் உறவு கொள்ள உங்களுக்கு ஏதேனும் அழுத்தம் இருக்கிறதா? அதாவது உங்களுடைய ப்ரெண்ட்ஸ் அல்லது குடும்பத்தால் உடலுறவு கொள்ள அழுத்தம் கொடுக்கப்படுகிறதா? துணை வற்புறுத்துகிறரா? என்பதை சிந்தியுங்கள். இதனால் அவர்கள் தங்களுடைய உடல் ஆசைகளை நிறைவேற்றி கொள்வார்கள். ஆனால் உங்களுக்கு முழுவிருப்பம் உள்ளதா? என்பது முக்கியம். நண்பர்கள் எல்லோரும் உறவு கொண்டதற்காக நீங்களும் செக்ஸ் வைத்து கொள்ள உணர்ச்சிரீதியாக உந்தப்படுகிறீர்களா? இதற்காக நீங்கள் செக்ஸ் வைத்து கொள்ள வேண்டாம். மனதளவில் தயாராக இருப்பதாக தோன்றினால் மட்டுமே வைத்து கொள்ள வேண்டும்.  


மற்றவர்களால் நீங்கள் தூண்டப்படுவதால் மட்டும் உடலுறவில் ஒருபோதும் ஈடுபடாதீர்கள். உண்மையில், நீங்கள் உடலுறவு கொள்ளத் தயாராக இல்லை என்றால், பின்னாளில் அதை நினைத்து வருத்தப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது. அந்த வருத்தம் உங்களை உயிருடன் தின்றுவிடும். செக்ஸ் வைத்து கொள்ள சங்கடமாகவும் பயமாகவும் இருந்தால், அப்போது நீங்கள் தயாராக இல்லை என்று பொருள். 

நீங்கள் உண்மையிலேயே நம்பும், பாதுகாப்பாக உணரும் ஒருவருடன் மட்டுமே முதல் முறையாக உடலுறவு கொள்ளுங்கள். நீங்கள் உடலுறவு கொள்ளப் போகும் போது பாதுகாப்பு உணர்வுடன் இருப்பது ரொம்ப முக்கியம். அது உங்கள் உடலிலும் மனதிலும் மாற்றத்தை கொடுக்கும். முதல் செக்ஸ் நல்லபடியாக இல்லாவிட்டால், நீங்கள் பாதிக்கப்பட்டதாக கூட உணரலாம். 

இதையும் படிங்க: அம்மாவின் காதல்.. 'அந்த காட்சியை' நேரில் கண்டு பதறிய மகன்... சின்ன வயதிலும் நிதானமாக யோசித்து எடுத்த முடிவு..!

இருவருக்கும் சம்மதம் என்பது உடலுறவின் ஒரு முக்கிய அங்கமாகும். நீங்களும் உங்கள் துணையும் முதல் முறையாக உடலுறவு கொள்வதற்கு முன், நீங்கள் இருவரும் எதில் வசதியாக (Comfortable) இருக்கிறீர்கள் என்பதை இருவரும் அறிந்திருக்க வேண்டும். இருவருக்கும் இடையில் ஏதோ பிரச்சனை இருப்பதை நீங்கள் கவனித்தால், அதை சரி செய்யுங்கள்.  

நீங்கள் செக்ஸ் வைத்து கொள்ள வேண்டியதை முடிவு செய்ய வேண்டிய ஒரே நபர் நீங்கள் தான். நீங்கள் முற்றிலும் தயாராக இருப்பதாக உணர்ந்தால், அதை செய்யுங்கள். இல்லையென்றால், காத்திருக்கவும். ஏனென்றால் அந்த அனுபவம் உங்கள் வாழ்நாள் முழுவதும் வரப்போகிறது. நீங்கள் யாருக்காக அதைச் செய்கிறீர்கள் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். முதல் தடவை மட்டுமல்ல... ஒவ்வொருமுறை செக்ஸ் வைத்து கொள்ளும்போதும் இதையெல்லாம் நினைவில் கொள்ளுங்கள். நலம் வாழுங்கள். 

இதையும் படிங்க: தினமும் தூங்கமுடியாம அவஸ்தையா? இதை செய்தால் குழந்தைங்க மாதிரி செம்ம தூக்கம் வரும்.. மூளை சுறுசுறுப்பா மாறும்..

Latest Videos

click me!