இதில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நன்மையை தந்தாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்துதான் அதிகம் உள்ளது. திராட்சையில் இருக்கும் நார்ச்சத்து இதயம் மற்றும் செரிமான மண்டலத்திற்கு நன்மை செய்தாலும் உடனடியாக இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பது நல்ல விளைவு அல்ல. இதற்கு பதிலாக பாதாம், வால்நட் உள்ளிட்ட உலர் பழங்கள் வகையை உண்ணலாம்.
மற்ற ஆரோக்கியமான பழங்கள்;
திராட்சைக்கு பதிலாக ஆப்பிள், பெர்ரிகள், ஆரஞ்சு ஆகியவை உண்ணலாம். குறைந்த கிளைசிமிக் இண்டெக்ஸ் கொண்ட நட்ஸ் உண்ணலாம்.