ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆம், தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உடல்நலப் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. சிலர் வழக்கமான உடற்பயிற்சியை செய்கிறார்கள், ஆனால் சிலர் அப்படி செய்வதில்லை. ஆனால் ஆரோக்கியமாக இருக்க, உடல் செயல்பாடுகளைச் செய்ய வேண்டும். மணிநேரம் உடற்பயிற்சி செய்ய உங்களுக்கு நேரம் இல்லையென்றால், ஒவ்வொரு நாளும் ஸ்கிப்பிங் செய்ய முயற்சிக்கவும். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.