மகிழ்ச்சியான வலுவான உறவுக்கு இவை தான் முக்கியம்.. கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க..

First Published | Dec 1, 2023, 9:14 PM IST

ஆரோக்கியமான மகிழ்ச்சியான உறவை உருவாக்குவதற்கு என்ன தேவை என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

திருமண உறவோ அல்லது காதல் உறவோ எதுவாக இருந்தாலும் நம் துணையால் அதிகமாக நேசிக்கப்படுவதையும் கவனித்துக்கொள்வதையும் உணர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

ஆனால் அதற்கு தேவையான முயற்சிகளை நாம் செய்வதில்லை. எனவே சில மாற்றங்களை ஆரோக்கியமான வலுவான உறவை உருவாக்க உதவுகிறது. ஆரோக்கியமான உறவை உருவாக்குவதற்கு என்ன தேவை என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

Tap to resize

குழந்தைப் பருவத்திலிருந்தே அன்பு மற்றும் உறவை பற்றி குறிப்பிட்ட மனநிலை உடன் தான் வளர்கிறோம். குடும்பத்தில் நாம் பார்த்த காதல் உறவாக இருந்தாலும் சரி, புத்தகங்களில் படித்ததாக இருந்தாலும் சரி, திரைப்படங்களில் அனுபவமாக இருந்தாலும் சரி, உறவுகளைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட மனநிலையுடன்தான் இருக்கிறோம். அந்த நிலைபாட்டை மாற்றி நமது உறவைப் பற்றி அதிகாரம் பெற்ற நிலைப்பாட்டை எடுப்பது முக்கியம் - இது சரியான நபர்களுடன் இணைவதற்கு நமக்கு உதவும்.

நமது தேவைகளைப் பூர்த்தி செய்தல்: அனைத்தையும் பங்குதாரரின் மீது வைத்து, நமது தேவைகள் அனைத்தையும் அவர் புரிந்துகொண்டு பூர்த்தி செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது உறவில் சிக்கலை ஏற்படுத்தும். ஆனால் அதற்கு பதிலாக, நம்மிடம் உள்ள தேவைகளைப் பற்றி அறிந்து அவற்றை உணர்வுபூர்வமாகச் சந்திக்க வேண்டும். இது அதிக சுய விழிப்புணர்வு மற்றும் சுய அன்புக்கான இடத்தை உருவாக்கும்.

அன்புடன் எல்லைகளை அமைத்தல்: எல்லா வகையான உறவுகளிலும் எல்லைகள் முக்கியமானவை, மேலும் நமக்கு முக்கியமான சில எல்லைகளை அமைப்பதை உறுதி செய்ய வேண்டும். அந்த எல்லைகள் குறித்து துணைக்கு புரிய வைப்பதும், அவர்கள் ஏன் எப்போதும் எல்லைகளை மதிக்க வேண்டும் என்பதை விளக்குவதும் முக்கியம். இதன் மூலம் பல சிக்கல், மோதல்களை தவர்க்கலாம்.

மோதல் மற்றும் குழப்பம் ஆகியவை உறவின் பகுதிகள் என்றாலும், , தவறான புரிதல்கள் மற்றும் குழப்பங்களை உறவில் இருந்து நீக்கி, புரிதல், நெருக்கம் மற்றும் நம்பிக்கைக்கான இடத்தை உருவாக்க நாம் உணர்வுபூர்வமாக முயற்சிக்க வேண்டும்.

Latest Videos

click me!