Benefits of Chewing Raw Ginger on an Empty Stomach
இன்றைய அவசர உலகில் நோய்கள் பொதுவாகி வருகின்றன. அமர்ந்த வாழ்க்கை முறையால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளில் இருந்து விடுபட இஞ்சி உதவியாக இருக்கும். உடல் பருமன் முதல் முதல் நாள்பட்ட நோய்கள் வரை பல பிரச்சனைகளில் இருந்து விடுபட இஞ்சி உதவுகிறது. காலையில் வெறும் வயிற்றில் இஞ்சியை மெல்லுவதால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.
25
செரிமான ஆரோக்கியம்
காலையில் பச்சை இஞ்சியை மென்று சாப்பிட்டால் செரிமான மண்டலம் நன்கு இயங்க உதவும். இது நாள் முழுக்க குடலுக்கு சிறந்த உறிஞ்சுதல் செயல்பாட்டிற்கு உதவும். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும். பச்சை இஞ்சி உமிழ்நீர், நொதி உற்பத்தியை ஊக்குவிக்கும். இது உணவை உடைக்க உதவும். அஜீர கோளாறை தடுக்க உதவும்.
காலை குமட்டலை நீக்கும்
கர்ப்பம் தொடர்பான குமட்டல் அல்லது வயிற்று வலிக்கு பச்சை இஞ்சியை மெல்லலாம். பச்சை இஞ்சி உடனடி நிவாரணத்தை கொடுக்கும். ஜிஞ்சரால், ஷோகோல் ஆகியவை மெல்லும்போது விரைவாக உறிஞ்சப்படும். இது குமட்டலை குறைக்கும்.
35
நோய் எதிர்ப்பு மண்டலம்
பச்சை இஞ்சி தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும். இதில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உடலை தொற்றுநோயில் இருந்து பாதுகாக்கும். தினசரி மெல்லுவதால் சளி, காய்ச்சல் அல்லது தொண்டை எரிச்சல் ஆகியவற்றுக்கு எதிராக போராடும். இயற்கையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உதவும்.
நச்சு நீக்கி
இஞ்சி மென்று உண்பது நிணநீர் வடிகால்களை ஊக்கப்படுத்தும். நச்சு நீக்கியாக செயல்படும். காலையில் மென்று தின்பதால் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
பச்சை இஞ்சியை மென்று சாப்பிடுவது இன்சுலின் அளவை ஒழுங்குபடுத்துகிறது. இதனால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். பிசிஓஎஸ் (PCOS) அல்லது ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனை இருப்பவர்களுக்கு நல்லது. இரத்த ஓட்டம் மேம்படும். கெட்ட கொழுப்பு படிதலை குறைக்கும். இரத்த உறைவை தடுத்து இதய நோய் ஆபத்தைக் குறைக்கிறது.
சுறுசுறுப்பு
கவனச்சிதறல் குறையும். மூளை சுறுசுறுப்பாக செயல்படும். இஞ்சி இயற்கையான ஆற்றல் பெட்டகம். இது உடல், மனம் இரண்டையும் ஆற்றலுடன் செயல்பட வைக்கும். கவனம் மேம்படும். அதிகாலை சோம்பலை நீங்கி சுறுசுறுப்பாவீர்கள்.
55
எடை குறையும்
பசியைக் குறைத்து உடல் எடை குறைய உதவும். பச்சை இஞ்சியை மென்று சாப்பிட்டால் கொழுப்பு குறையும். சத்தான உணவு பழக்கத்துடன் பச்சை இஞ்சி மெல்லுதல் எடை குறைப்பு நல்ல தீர்வாகும்.