மாரடைப்பை தடுக்க; இந்த 8 அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்லுங்கள்!

Published : Feb 04, 2025, 03:53 PM ISTUpdated : Feb 04, 2025, 03:56 PM IST

மாரடைப்பு என்பது, அனைத்து வயதினரையும் தாக்கும் ஒரு மிக கொடிய பிரச்சனையாக மாறியுள்ளது. மாரடைப்பை தவிர்க்க, இந்த 8 அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவ மனையை அணுகவும்.  

PREV
19
மாரடைப்பை தடுக்க; இந்த 8 அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்லுங்கள்!
மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் உடலில் தெரியும் 8 அறிகுறிகள்:

மாரடைப்பு என்பது யாருக்கு எப்போது வருகிறது என்று கணிக்க முடியாது. அண்மையில் 4 வயது குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம், பேசு பொருளாக மாறியது. அதே போல் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும், மாரடைப்பு ஏற்பட்டது அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதில் இருந்து விடுபட, குறிப்பிட்ட வயதுக்கு மேல், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள், உப்பு, சர்க்கரை போன்றவற்றை கட்டுக்குள் வைக்க வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

சரி மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் உடலில் தெரியும் 8 அறிகுறிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். 
 

29
அசிடிட்டி:

ஒரு சிலருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு, நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரண கோளாறு போன்ற அறிகுறிகள் தோன்றும்.  தொடர்ந்து ஏப்பம் வந்து கொண்டே இருப்பது, இதன் அறிகுறியாக இருக்கலாம். இன்னும் ஒரு சிலர்க்கு நெஞ்செரிச்சலுடன் வாந்தி - குமட்டல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். சாதாரண அஜீர கோளாறை விட தீவிரம் அடைவதை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது.

சிறுநீர் கழித்த உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கா? இந்த 'ஆபத்தான' நோய் வரும் ஜாக்கிரதை!

39
அதிகப்படியான வியர்வை:

மாரடைப்பு ஏற்படும் அறிகுறிகளில் ஒன்று, அதிகப்படியான வியர்வை. ஏசி ரூமில் இருந்தால் கூட, தண்ணீர் உடலில் இருந்து வழிவதை உணர்வீர்கள். நெஞ்சு பாரமாவதையும் சிலர் உணர முடியும். இந்த அறிகுறி தெரிந்தால் தாமதிக்காமல், வீட்டில் இருப்பவர்களிடம் கூறி மருத்துவமனைக்கு சென்று விடுங்கள். தானாகவே ஒருவர் கார் அல்லது பைக் ஓடிக்கொண்டு, மருத்துவமனைக்கு செல்ல முயல்வது சில நேரங்களில் பிரச்னையை சிக்கலாக்க கூடும்.

49
நெஞ்சு வலி:

நெஞ்சு வலி என்பது மிகவும் பொதுவான மற்றும் எளிதில் அடையாளம் காணக்கூடிய அறிகுறியாகும். அதே நேரம் நெஞ்சு வலி வந்தாலே... அது மாரடைப்பு என்கிற அர்த்தம் இல்லை. மன அழுத்தம், வேளையில் உண்டாகும் அழுத்தம், கேஸ்டிக் போன்ற பிரச்சினைகளாலும் நெஞ்சு வலி, நெஞ்செரிச்சல் உண்டாகும். எனவே எல்லா வலிக்கும் பயம் கொள்ளாதீர்கள்.

ஒருவரால் பொறுக்க முடியாத அளவுக்கு நெஞ்சு வலி, கூடவே இடது தோள்பட்டை வலி, இடது கை மற்றும் தாடை வலி இருந்தால் உடனே மருத்துவமைக்கு செல்வது நன்று.

பச்சை பட்டாணியில் சத்துக்கள் நிறைய இருக்கு; ஆனா இவங்க மட்டும் சாப்பிடக்கூடாது!

59
பிபி குறைதல்:

ஒரு சிலருக்கு மாரடைப்பின் அறிகுறியாக பிபி மளமளவென குறையும். திடீர் தாலி சுற்றலோடு... நெஞ்சுவலி, அல்லது வேர்வை கொட்டுவது போன்ற சில அறிகுறிகள் தெரிந்தால் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு செல்லவும்.

69
மூச்சுத் திணறல்:

மூச்சுத் திணறல் ஏற்படுவதும், மாரடைப்பின் ஒரு அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. நெஞ்சு வலியுடன் மூச்சுத் திணறல் ஏற்படலாம். பின்னர் அது தீவிரம் அடையும் பட்சத்தில் அருகே இருக்க கூடிய மருத்துவனைக்கு செல்லுங்கள். 

புற்றுநோயைத் தடுக்க உதவும் சிம்பிள் டிப்ஸ்!
 

79
அதிகப்படியான சோர்வு:

வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான சோர்வு அல்லது பலவீனம் ஏற்படுவது போல் ஒருவர் உணர்வதும் மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கலாம்.

89
பதட்டம், பயம்:

ஏதோ நடக்கப் போகிறது என்ற உணர்வு மற்றும் உணர்ச்சிபூர்வமான அறிகுறிகளும் சில நேரங்களில் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு ஏற்படலாம். நெஞ்சு படபடப்பை உணர்வார்கள். வேர்த்து கொட்ட துவங்கும். இது போன்ற சூழலிலும் கூடியவரை சீக்கிரம் மருத்துவமனைக்கு செல்லுங்கள்.

தினமும் 1 ஸ்பூன் பரங்கி விதை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

99
நடக்க முடியாத நிலை:

ஒரு சிலருக்கு நடக்க கூட முடியாத நிலை உருவாகும். படிகளில் ஏறவோ அல்லது இறங்கவோ முடியாமல் போகலாம். மேலும், கால்கள் மற்றும் உடல் குளிர்ச்சியடைவது போல் உணரலாம். இது போன்ற சமயத்தில் குடும்பத்தினரிடம் கூறி அந்த நபர் மருத்துவமனைக்கு செல்வது சிறந்தது.

கவனம்: மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால், சுயமாக நோய் கண்டறிய முயற்சிக்காமல், உங்கள் மருத்துவரை 'அணுகவும்'. அதன் பிறகு மட்டுமே நோயை உறுதிப்படுத்தவும்.

click me!

Recommended Stories