உடலில் ஏற்படும் நாள்பட்ட வீக்கம் (Chronic Inflammation) பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். அதைத் தவிர்த்து, உடலை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க தினமும் சாப்பிட வேண்டிய 8 சிறந்த வீக்க எதிர்ப்பு உணவுகள் பற்றிய தொகுப்பு இதோ.
மஞ்சளில் உள்ள கர்குமின் (Curcumin) எனும் கூட்டுப்பொருள் சக்திவாய்ந்த வீக்க எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்களைக் கொண்டுள்ளது. அதேபோல், இஞ்சியில் உள்ள ஜிஞ்சரோல் (Gingerol) உடலின் வீக்கத்தை உண்டாக்கும் என்சைம்களைத் தடுக்கிறது.
சாப்பிடும் முறை: தினமும் பாலில் மஞ்சள் கலந்து குடிக்கலாம் அல்லது சமையலில் இஞ்சியைத் தவறாமல் சேர்க்கலாம்.
28
பச்சை இலைக்காய்கறிகள் :
பாலக்கீரை, பிராக்கோலி மற்றும் பிற பசலைக்கீரைகளில் வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் ஃபைட்டோ கெமிக்கல்கள் அதிகம் உள்ளன. பிராக்கோலியில் உள்ள சல்ஃபோராஃபேனி (Sulforaphane) எனும் சத்து உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும் மூலக்கூறுகளை எதிர்த்துப் போராடுகிறது.
சாப்பிடும் முறை: கீரைகளை அவித்து அல்லது சூப் செய்து சாப்பிடலாம்.
38
பெரி பழங்கள் :
ப்ளூடெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் பிளாக்பெர்ரி போன்ற பழங்களில் அந்தோசயனின் (Anthocyanins) எனும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இவை செல்லுலார் மட்டத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.
சாப்பிடும் முறை: காலை உணவான ஓட்ஸ் உடன் சேர்த்தோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம்.
சால்மன் (Salmon), கானாங்கெளுத்தி (Mackerel), மற்றும் சூரை (Tuna) போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் (Omega-3 Fatty Acids) அதிக அளவில் உள்ளன. இவை உடலில் வீக்கத்தை உண்டாக்கும் புரதங்களைக் குறைத்து இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன.
வால்நட்ஸ், பாதாம், ஆளிவிதைகள் (Flaxseeds) மற்றும் சியா விதைகளில் தாவர அடிப்படையிலான ஒமேகா-3 மற்றும் வைட்டமின் ஈ நிறைந்துள்ளன. இவை மூட்டு வீக்கம் மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.
சாப்பிடும் முறை: ஊறவைத்த பாதாம் மற்றும் வால்நட்ஸை தினமும் காலை நேரத்தில் சாப்பிடலாம்.
68
எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய் :
ஆலிவ் எண்ணெயில் உள்ள ஒலியோகாந்தல் (Oleocanthal) எனும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், வீக்கத்தைக் குறைக்கும் ஸ்டீராய்டு அல்லாத மருந்துகளைப் போலவே (NSAIDs) செயல்படுகிறது. இது இதய ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
சாப்பிடும் முறை: சாலட்களின் மேல் தெளித்தோ அல்லது குறைந்த வெப்பத்தில் சமைக்கவோ பயன்படுத்தலாம்.
78
தக்காளி :
தக்காளியில் லைக்கோபீன் (Lycopene) என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள பல்வேறு வீக்கக் காரணிகளைச் சீராக்க உதவுகிறது. தக்காளி சமைக்கப்படும்போது லைக்கோபீன் சத்து உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது.
சாப்பிடும் முறை: சூப், தொக்கு அல்லது சமைத்த உணவுகளில் தக்காளியைச் சேர்த்துக்கொள்ளலாம்.
88
கிரீன் டீ :
கிரீன் டீயில் EGCG (Epigallocatechin Gallate) எனும் கேடசின் கூட்டுப்பொருள் உள்ளது. இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அழித்து, செல்கள் சேதமடைவதையும் வீக்கத்தையும் தடுக்கிறது.
சாப்பிடும் முறை: தினமும் 1 அல்லது 2 கப் கிரீன் டீ குடிப்பது நல்லது.