
பேரிச்சம்பழம் பல நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. இரத்தசோகை வராமல் தடுக்க தினமும் பேரீச்சம் பழம் சாப்பிட சொல்வது வழக்கம். இதில் ஊட்டச்சத்துக்கள் மட்டுமின்றி சுவையும் அலாதியாக இருக்கும். டயட்டுக்கான சர்க்கரையை தவிர்ப்பவர்கள் கூட பாலில், இனிப்பு பண்டங்களில் சுவைக்காக பேரீச்சம் பழங்களை சேர்த்துக் கொள்கிறார்கள். பேரீச்சம் பழத்தின் தித்திப்பான சுவை யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் பழங்களை சாப்பிட்டு விட்டு விதைகளை நாம் தூக்கி எறிந்து விடுகிறோம். அந்த விதைகளில் கூட சத்துக்கள் காணப்படுகின்றன. அதை எவ்வாறு பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என இந்த பதிவில் காணலாம்.
இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவும். உடலின் தசைகளை வலுவாக்கும் புரதம் இந்த விதைகளில் உள்ளன. பேரீச்சம்பழ விதைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் உண்டாகும் செல் சேதத்திலிருந்து நம்மை பாதுகாக்கின்றன. உடலின் இயக்கத்திற்கு தேவையான மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம் ஆகிய வைட்டமின்கள், தாதுக்கள் பேரீச்சம் பழ விதைகளில் கொட்டிக் கிடக்கின்றன. பேரீச்சம்பழத்தின் விதைகளில் 7 விதமான நன்மைகள் கிடைக்கின்றன. பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கொண்டுள்ள பேரீச்சம்பழ விதைகளை பொடி செய்து பயன்படுத்தலாம்.
இதையும் படிங்க: தினமும் 2 பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் உடலில் நடக்கும் மேஜிக்! என்னென்ன தெரியுமா?
பேரீச்சம்பழங்களை சாப்பிட்டதும் அதன் விதைகளை சேகரித்து பொடி தயார் செய்யுங்கள். இந்தப் பொடியை இனிப்பு பண்டங்களில், ஸ்மூத்திகள், தயிரில் கலந்து உண்ணலாம். பேரீச்சம்பழ விதைகளை சேர்த்து வைத்து அதிலிருந்து எண்ணெய் எடுத்து பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் தலைமுடிக்கு நல்லது. சருமத்திற்கு கூட அடிக்கடி உபயோகிக்கலாம்.
இதையும் படிங்க: இந்த ஒரு பழம் போதும்... சுகமான மற்றும் வலியற்ற பிரசவத்திற்கு கேரண்டி!
செரிமானம் மேம்படும்!
செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க இந்த விதைகளின் பொடி உதவும். பேரீச்சம்பழ விதைகளில் காணப்படும் நார்ச்சத்து செரிமான மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால் விரைவில் குணமாகும்.
இதய ஆரோக்கியம்:
இந்த விதைகளின் பொடியை அடிக்கடி உண்பதால் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனேற்றிகள் கிடைக்கும். இதனால் கெட்ட கொழுப்பு கரைந்து இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். இதய ஆரோக்கியமும் மேம்படும்.
சர்க்கரை நோய் கட்டுபாடு:
பேரீச்சம்பழ விதைகளின் பொடியை உண்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். இதனை உண்பதால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.
பேரீச்சம்பழ விதைகளில் காணப்படும் நார்ச்சத்து நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தரும். இதனால் அதிகம் சாப்பிடத் தோன்றாது. எடை குறைக்க நினைப்பவர்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும்.
தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியம்;
பேரீச்சம் பழ விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் முடி உறுதியாகிறது. சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்க பேரீச்சம் பழ விதைகள் இருந்து தயார் செய்யும் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.
புற்றுநோய் தடுப்பு:
பேரீச்சம்பழ விதைகளில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கிறது. இந்த விதைகள் உடலுக்கு நன்மைகள் செய்தாலும் எல்லோருக்கும் நல்ல விதமாக அமையும் என சொல்லிவிட முடியாது. சிலருக்கு ஒவ்வாமை வரலாம். ஒருமுறை மருத்துவரின் ஆலோசனை கேட்டுக்கொள்ளுங்கள்.