டயட், உடற்பயிற்சி என என்ன செய்தாலும் உடலில் உள்உறுப்புக்களில் இருக்கும் கொழுப்பை குறைக்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? இந்த 7 வழிகளை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் உடலில் மாற்றங்களை காணலாம். ஆரோக்கியமாக கொழுப்பை குறைக்க இது பெஸ்ட் ஐடியா.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உங்கள் வயிற்றில் தண்ணீரை உறிஞ்சி, ஒரு ஜெல் போல மாறும். இது செரிமானத்தை மெதுவாக்கி, நீங்கள் நீண்ட நேரம் பசியில்லாமல் இருப்பீர்கள். இதனால் குறைவாக சாப்பிடுவீர்கள். ஆளி விதைகள், ஓட்ஸ், பார்லி, பீன்ஸ், ஆப்பிள்கள், ஆரஞ்சு, கேரட், ப்ரோக்கோலி மற்றும் கொட்டைகள் போன்றவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 25-30 கிராம் நார்ச்சத்து எடுத்துக்கொள்வது நல்லது.
27
புரதச்சத்து நிறைந்த உணவை உண்ணுங்கள்:
புரதம் நிறைந்த உணவுகள் பசியைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை அதிகரிக்கின்றன. மேலும், இது உங்கள் உடல் ஓய்வெடுக்கும்போது கூட கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது, முட்டை, மீன், கோழி, பருப்பு வகைகள், டோஃபு, பன்னீர் மற்றும் தயிர் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை ஒவ்வொரு வேளை உணவிலும் சேர்த்துக்கொள்வது உள்ளுறுப்பு கொழுப்பைக் குறைக்க சிறந்த வழி.
37
கொழுப்புகள் நிறைந்த உணவை உண்ணுங்கள்:
அனைத்து கொழுப்புகளும் கெட்டவை அல்ல. நல்ல கொழுப்புகள் இதயத்திற்கு நல்லது மற்றும் உள்ளுறுப்பு கொழுப்பைக் குறைப்பதில் உதவும். இவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, இன்சுலின் சரியாக வேலை செய்ய உதவும். அவகேடோ, ஆலிவ் எண்ணெய், பாதாம், வால்நட்ஸ், சியா விதைகள், பூசணி விதைகள் மற்றும் சால்மன், மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருக்கும் டிரான்ஸ் கொழுப்புகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சோடா, இனிப்பு ஜூஸ்கள், இனிப்பு டீ மற்றும் எனர்ஜி பானங்கள் போன்ற சர்க்கரை பானங்களில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். இந்த சர்க்கரை நேரடியாக உங்கள் கல்லீரலில் கொழுப்பாக மாறி, உள்ளுறுப்பு கொழுப்பை அதிகரிக்கும். இந்த பானங்களுக்குப் பதிலாக, சாதாரண தண்ணீர், எலுமிச்சை சேர்த்த நீர், மோர், இளநீர், சர்க்கரை சேர்க்காத க்ரீன் டீ அல்லது கருப்பு காபி போன்ற ஆரோக்கியமான மாற்றுப் பானங்களைத் தேர்ந்தெடுப்பது உள்ளுறுப்பு கொழுப்பைக் குறைக்க உதவும்.
57
நிதானமாக சாப்பிடும் பழக்கம்:
உணவை நிதானமாக, நன்றாக மென்று சாப்பிடுவது, நீங்கள் திருப்தி அடையும் வரை மட்டுமே உண்ண உதவும். வேகமாக சாப்பிடும்போது, உங்கள் மூளைக்கு வயிறு நிறைந்த செய்தி வந்து சேருவதற்குள் நீங்கள் அதிகமாக சாப்பிட வாய்ப்புள்ளது. இது அதிக கலோரிகள் உட்கொள்வதற்கும், உள்ளுறுப்பு கொழுப்பு அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும். உணவை ரசித்து, கவனத்துடன் சாப்பிடுவது உங்கள் பசியைக் கட்டுப்படுத்த உதவும்.
67
மது அருந்தும் பழக்கத்தைக் கைவிடுங்கள்:
அளவுக்கு அதிகமாக மது அருந்தும்போது, அது கல்லீரலில் கொழுப்பாகச் சேமிக்கப்படும். இது உள்ளுறுப்பு கொழுப்பை அதிகரிக்கும். மது அருந்தும் பழக்கத்தை முழுமையாக நிறுத்துவது அல்லது அதன் அளவைக் குறைப்பது உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கும், உடல் நலத்திற்கும் நல்லது.
77
உடற்பயிற்சி செய்யுங்கள்:
உடற்பயிற்சி உள்ளுறுப்பு கொழுப்பைக் குறைக்க மிகவும் பயனுள்ள வழி. வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சிகளான நடைபயிற்சி, ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நீச்சல் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. அதனுடன், வாரத்திற்கு இரண்டு முறை தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை (உடல் எடை பயிற்சி அல்லது வெயிட் லிஃப்டிங்) செய்வதும் முக்கியம். தசைகள் கொழுப்பை விட அதிக கலோரிகளை எரிக்கின்றன, எனவே தசை அளவை அதிகரிப்பது நீங்கள் ஓய்வெடுக்கும்போது கூட கொழுப்பை வேகமாக எரிக்க உதவும்.