சரியான தூக்கம் உடலுக்கும் மனதுக்கும் மிகவும் அவசியம். நாம் தூங்கும்போது, நமது உடல் தன்னைத்தானே சரிசெய்து புதுப்பித்துக் கொள்கிறது. மூளை தகவல்களை ஒருங்கிணைத்து நினைவுகளை உருவாக்குகிறது. போதுமான தூக்கம் இல்லாவிட்டால், சோர்வு, கவனமின்மை, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். நீண்ட காலப் போக்கில், இது உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் மனநல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
ஒரு நாளைக்கு 7-9 மணி நேரம் தூங்க வேண்டும். குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினருக்கு இன்னும் அதிக தூக்கம் தேவைப்படலாம். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்கச் செல்வ கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். படுக்கையறை எப்பொழதும் அமைதியாகவும், இருட்டாகவும், குளிர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தூங்கும் நேரத்திற்கு முன் மொபைல், லேப்டாப் மற்றும் டிவி பார்ப்பதை தவிர்த்து புத்தகம் படித்தல், தியானம் போன்றவற்றை மேற்க் கொள்ளவேண்டும்.