Secrets About Partner Which You Should Not Share With Anyone
கணவன் மனைவிக்குள் எந்த ரகசியங்களும் இருக்கக் கூடாது. அப்போதுதான் உறவில் நிலைத்தத்தன்மை இருக்கும். கணவனோ அல்லது மனைவியோ தன்னிடம் ஏதோ ஒன்றை தன்னிடம் மறைப்பதாக தோன்றினால் அந்த உறவில் நிம்மதி இருக்காது. இதைத் தவிர்க்க கணவன் மனைவிக்குள் வெளிப்படைத்தன்மை கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆனால் மற்றவர்களிடம் ஒருவருக்கொருவர் சில விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். கணவனோ அல்லது மனைவியோ தங்களுடைய துணை குறித்து பிறரிடம் பகிரக்கூடாத சில ரகசியங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
26
அந்தரங்கம்
உங்களுடைய அந்தரங்கள் குறித்து யாருக்கும் பகிரவேண்டாம். கணவன் அல்லது மனைவி இருவரும் உங்களுடைய துணை குறித்த எந்த அந்தரங்கமான விஷயங்களையும் யாரிடம் சொல்லக் கூடாது. படுக்கையறை விஷயங்கள் எப்போதும் வெளியில் சொல்லக் கூடியவை அல்ல.
36
பலவீனம்
பலவீனங்கள் எப்போதும் உங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படலாம். அதனால் உங்களுடைய பலவீனங்கள் பற்றி பிறரிடம் பகிர வேண்டாம். அதனால் உங்களுடைய துணை குறித்த மற்றவர் பார்வை மாறக் கூடும்.
உங்களுடைய வாழ்க்கைத் துணையுடன் சண்டை வந்தால் அதனை வெளியில் சொல்லக் கூடாது. ஏனெனில் அதை மற்றவர்கள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தலாம். உங்களுடைய சிறுசண்டையைக் கூட பிறர் பெரிதுபடுத்தக் கூடும்.
56
வாழ்க்கைத் திட்டங்கள்
உங்களுடைய வாழ்க்கைத் துணை பகிர்ந்த விஷயங்களை அவர் விருப்பம் இன்றி பிறருக்கு சொல்லக் கூடாது. வாழ்க்கையின் சிறந்த பகுதிகள் ரகசியமாக இருப்பது நல்லது. உங்களுடைய எதிர்கால திட்டங்கள், சேமிப்பு போன்ற விஷயங்கள் ரகசியமாக இருக்கவேண்டியவை.
66
குறைகள்
உங்கள் வாழ்க்கைத் துணை பற்றிய குறைகளை பிறரிடம் புலம்ப வேண்டாம். நிறைகளை அளவாக பகிரலாம். குறைகளை சொல்லவே கூடாது.