
மலச்சிக்கல் பிரச்சனையால் நீங்கள் ரொம்பவே சிரமப்படுகிறீர்களா? இதனால் உங்களால் நாள் முழுவதும் சகஜமாக இருக்க முடியாமல் போகிறதா? எப்போதுமே ஒரு விதமான அசெளகரியத்துடன் இருக்கிறீர்களா? இதனால் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போகிறதா? அப்படியானால் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்வதற்கான வழியை கண்டறிந்து, உடனே அதை சரி செய்ய முயற்சி செய்யுங்கள்.
ஏனென்றால் குடல் ஆரோக்கியம் தான் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. இதில் ஏற்படும் வீக்கம், மலச்சிக்கல், அமலத்தன்மை போன்ற செரிமான பிரச்சனைகள் நம்முடைய உடல் மற்றும் மனதை பெரிதும் பாதிக்கும். மூன்று நாட்கள் மலம் வரவில்லை என்றால் அது மலச்சிக்கல் ஆக அறியப்படுகிறது. வயிற்று வலி, வயிற்றுப் பிடிப்புகள், வீக்கம் போன்றவை நாள்பட்ட மலச்சிக்களின் அறிகுறியாக இருக்கும்.
மலச்சிக்கலைப் போக்க நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளன. அதுவும் சில குறிப்பிட்ட காய்கறிகளில் நார்ச்சத்து ஏராளமாக உள்ளன. இந்த குடல் இயக்கத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் அவற்றில் நிரம்பியுள்ளன. எனவே மலச்சிக்கல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தினமும் தங்களது உணவில் அந்த காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும் மலச்சிக்கல் பிரச்சினை இனி வரவே வராது. சரி இப்போது மலச்சிக்கல் பிரச்சினையை சரி செய்ய உதவும் சில காய்கறிகளின் பற்றி இந்த பதிவில் காணலாம்.
1. பசலைக்கீரை :
கீரையில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து இருப்பதை நாம் ஏற்கனவே அறிந்ததே. அதுவும் குறிப்பாக பசலைக் கீரையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளன. அதுவும் கரையக்கூடிய நார் சத்து. இது கடினமான மழை பெய்யும் சுலபமாக வெளியேற்ற உதவும். இன்னைக்கு இடையில் இருக்கும் மெக்னீசியம் செரிமான பாதையின் தசைகளை ரிலாக்ஸ் ஆக வைக்க உதவும். இதனால் கழிவுகள் எளிதில் வெளியேறும். எனவே மலச்சிக்கல் பிரச்சனையால் சிரமப்படுகிறவர்கள் தினமும் தங்களது உணவில் இந்த கீரையை சேர்த்துக் கொள்வது நல்லது.
2. ப்ராக்கோலி :
ப்ராக்கோலியில் நார்ச்சத்து உள்ளிட்ட பிற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இதில் கரையாத நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் கழிவுகளை விரைவில் வெளியேற்ற உதவும். ப்ரோக்கோலியில் இருக்கும் சேர்மங்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும். எனவே ப்ராக்கோலி உங்களது உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை வரவே வராது, குடல் ஆரோக்கியமும் மேம்படும்.
3. முட்டைகோஸ் :
முட்டைக்கோஸில் நார்ச்சத்து, நீர்ச்சத்து அதிகமாகவே உள்ளதால், இதை உங்களது உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் குடல் இயக்கம் ஆரோக்கியமாக இருக்கும். இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் வைட்டமின்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வீக்கத்தை குறைக்க உதவும். எனவே மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் முட்டைகோஸை உங்களது உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
4. கேரட்:
பொதுவாக கேரட் கண்களுக்கு ரொம்பவே என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவை செரிமானத்தை சிறப்பாக வைக்க உதவும். முக்கியமாக இதில் இருக்கும் கரையாத நார்ச்சத்து தேங்கி இருக்கும் மலத்தை சுலபமாக வெளியேற்ற உதவும். எனவே மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் கேரட்டை தங்களது உணவில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
5. சர்க்கரைவள்ளி கிழங்கு :
சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும். இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் குடல் இயக்கத்தை சிறப்பாக வைக்கும். அதுமட்டுமல்லாமல் இதில் நீர்ச்சத்து வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற ஊட்டச் சத்துக்களும் காணப்படுகின்றன. சர்க்கரைவள்ளி கிழங்கை நீங்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை வரவே வராது.