Foods Not To Eat With Cucumber : கோடை காலம் ஆரம்பம் ஆகிவிட்டதால் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எனவே, வெயிலை சமாளிக்க அதிக நீர்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். அந்த வகையில் கோடையில் நீங்கள் அதிகம் சாப்பிட வேண்டிய பட்டியலில் ஒன்றுதான் வெள்ளரிக்காய். இதில் அதிக அளவு நீர் சத்து உள்ளதால், உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். இதை நீங்கள் பச்சையாகவோ அல்லது சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம். ஆனால் வெள்ளரிக்கையை சில உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். மீறி சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் உள்ளிட்ட சில விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர். இப்போது வெள்ளரிக்காயை எந்தெந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.