Coconut Water : கோடைக் காலம் வரப்போகிறது- இளநீர் பற்றி தெரிந்துகொள்வோமா..??

First Published | Mar 2, 2023, 1:27 PM IST

இந்தியாவில் கோடைக் காலம் வருவதற்கு இன்னும் சில வாரங்கள் தான் உள்ளன. அப்போது பலரும் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்வது முக்கியம். அதற்கு இளநீர் குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  இளநீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
 

விரைவில் கோடைக் காலம் துவங்கவுள்ளது. அப்போது நம் உடலை மிகவும் குளிர்ச்சியாக வைத்திருப்பது முக்கியமாகும். அதற்கு பல்வேறு ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வது அவசியமாகும். அந்த வகையில் இளநீரின் நன்மைகள் குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டும். சாலை மார்க்கமாக போகும் போது, ஆங்காங்கே இளநீர் விற்பதை நம்மில் பலர் பார்த்திருப்போம். எனினும், வாகனத்தை நிறுத்தி இறங்கி குடிப்பவர்கள் வெகு சிலரே. அப்படிப்பட்ட சூழலில் இளநீரை குடிக்கும் போது, உடலுக்கு புத்துணர்ச்சி மற்றும் குளிர்ச்சி ஏற்படுகிறது. மேலும் உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்கிறது. இளநீரை அடிக்கடி பருகி வந்தால் சிறுநீரக கற்கள் பிரச்னை இருந்தால் உடனடியாக போய்விடும். அதே வேளையில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் இளநீரைக் குடிக்கலாம். அதுமட்டுமில்லாமல் இளநீரால் சருமமும் பொலிவு பெறும். 

இளநீரில் தாதுக்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் இயற்கையான ஆதாரம் நிறைய உள்ளது. தேங்காய் நீர் ஒரு ஊட்டச்சத்து சக்தியாகும். கோடை காலம் முழுவதும் தேங்காய் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெளிவாக தெரிந்துகொள்வோம்.

Beauty Tips-Use coconut oil for hair and skin care

சருமம் பொலிவடையும்

உடல் ஆரோக்கியத்துக்கும் இளநீர் மிகவும் நல்லதாகும். இதை நாம் தினமும் குடித்து வந்தால், விரைவாகவே உடலில் இருந்து நச்சுத்தன்மை நீங்கிவிடும். அதன்காரணமாக சருமம் ஆரோக்கியமாக மாறும். இளநீர் உடலை ஈரப்பதமாக்குகிறது மற்றும் மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இதை தொடர்ந்து குடித்து வருவது பல்வேறு சருமபப் பிரச்னைக்கு தீர்வாக அமையும்.
 

Tap to resize

சக்கரை நோய் கட்டுப்படும் 

கோடைக் காலத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான பானங்கள் எதுவும் கொடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக இளநீரை குடிக்கக் கொடுக்கலாம். போதுமான அளவில் இளநீர் குடிப்பதால், ரத்தத்தில் சக்கரை அளவு கட்டுப்படும் மற்றும் நீரிழிவு பிரச்னைக்கான அறிகுறிகள் எதுவும் ஏற்படாது. இளநீரில் இயற்கையாகவே சக்கரை கூறுகள் உள்ளன. அதனால் சக்கரை நோயாளிகள் அளவுடன் தான் பருக வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு தினமும் முக்கால் முதல் ஒரு கிளாஸ் வரை இளநீர் கொடுப்பது போதுமானது. 

Water fasting: மாதம் ஒருமுறை தண்ணீர் விரதம் இருப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

சிறுநீரகக் கல்

தொடர்ந்து இளநீரை குடிப்பது சிறுநீர் ஆரோக்கியத்துக்கு வலிமை சேர்க்கும். சிறுநீரகக் கற்கள் பிரச்னை இருப்பவர்களுக்கு இளநீர் குடிப்பது, வெகு சீக்கரமே கற்கள் வெளியேறிவிடும். அடிக்கடி இந்நீரை பருகி வந்தால், தேங்காய் நீர் கற்களை அகற்ற அல்லது அவை உருவாவதை தடுக்க முடியும். சிறுநீரகக் கற்கள் பிரச்னை இல்லாதோர் இளநீரை குடிப்பதன் மூலம், உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும். 
 

heart health

இருதய நலன்

இளநீர் இதயத்திற்கும் நன்மை பயக்கும். இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. பல ஆய்வுகள் தேங்காய் தண்ணீர் குடிப்பதால் இருதய நோய் அபாயம் குறைகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளது.

Chest mucus: நெஞ்சு சளியால் கடும் அவதியா! இதோ சில இயற்கையான மருத்துவ குறிப்புகள்!

coconut water

இளநீரில் வைட்டமின்கள், தாதுக்கள், பொட்டாசியம், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன, அவை மன அழுத்தத்தையும் ஃப்ரீ ரேடிக்கல் பிரச்னைகள் வராமல் தடுக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்களுடன் சேர்ந்து, இது நல்ல ஆண்டி அக்சிடண்டுகள் திறன்களை வழங்குகிறது, இது ஆண்டி அக்சிடண்டுகள்  அழுத்தத்தையும் ஃப்ரீ ரேடிக்கல்களையும் குறைக்க உதவுகிறது.

Latest Videos

click me!