Dating an older Lady : வயது மூத்த பெண்கள் மீது ஆண்களுக்கு ஈர்ப்பு ஏற்பட இதுதான் காரணம்..!!

Published : Mar 02, 2023, 12:04 PM IST

இளம் வயது ஆண்கள், தன்னை விட மூத்த வயது பெண்களை டேட்டிங் செய்யும் போது நிறைய திருப்பங்கள் உள்ளன. எனினும் ஆச்சரியப்படும் விதமாக, அதில் சில அபாயங்களும் உள்ளன. அதுகுறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம். 

PREV
17
Dating an older Lady : வயது மூத்த பெண்கள் மீது ஆண்களுக்கு ஈர்ப்பு ஏற்பட இதுதான் காரணம்..!!
lexi, dating

நிறைய ஆண்களுக்கு தங்களை விடவும் வயதில் மூத்த பெண்களை மிகவும் பிடிக்கும். இது பலருக்கும் ஆச்சரிய தகவலாக இருக்காது. அதற்கு காரணம் வயது மூத்த பெண்களிடம் இருக்கும் ஒருவித அனுபவம் தான். அதுதான் இளம் வயது ஆண்களை பெரிதும் ஈர்க்கிறது. பெண் என்கிற உருவத்தில் மட்டுமில்லாமல், அவர்களிடையே காணப்படும் முதிர்ச்சி, நம்பிக்கை, கவர்ச்சி உள்ளிட்ட பல விஷயங்கள் உள்ளன. அதனால் இளம் வயது ஆண்கள், தன்னை விட மூத்த வயது பெண்களை டேட்டிங் செய்யும் போது நிறைய திருப்பங்கள் உள்ளன. எனினும் ஆச்சரியப்படும் விதமாக, அதில் சில அபாயங்களும் உள்ளன. அதுகுறித்து ஒவ்வொன்றாக பார்க்கலாம். 

27

திருப்பம்: வயதான பெண்கள் தங்களை அறிவார்கள்

வயதான பெண்கள் தங்களை நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். அவர்கள் தங்கள் துணையிடம் இருந்து என்ன தேவை என்பதை துல்லியமாக கண்டுப்பிடிக்க கூடியவர்களாக இருப்பார்கள். அதற்கு அவர்களுக்கு பெரியளவில் நேரம் தேவை கிடையாது. ஒருவருடனான உறவில் தங்களுக்கு என்ன தேவை? தங்களுடைய விருப்பம் என்ன? என்பதில் தெளிவு இருக்கும். அதை வைத்து குழப்பிக் கொள்ள மாட்டார்கள்.

37

அபாயம்: நிறைய முன்முடிவுகள் இருக்கக்கூடும்

இளைய ஆண்கள் வயதான பெண்களுடன் பழகுவதைச் சுற்றி சமூகத்தில் நிறைய முன் முடிவுகள் இருக்கும். அது ஒரு பெரும் கலங்கமாக விஷயமாகவும் தோன்றலாம். இது மிகவும் பொதுவான கருத்தாக இல்லாவிட்டாலும், பலரும் சமூக நெறிமுறைகளை மீறுகிறார்கள் மற்றும் அவர்களின் வயதுக்கு அப்பாற்பட்ட நபர்களுடன் டேட்டிங் செய்ய விரும்புகின்றனர்.

47

திருப்பம்: வயதான பெண்களுக்கு படுக்கையில் அனுபவம் இருக்கும்

பொதுவாக ஆண்களை விட வயது மூத்த பெரும்பாலான பெண்களுக்கு படுக்கையில் அனுபவம் இருக்கக்கூடும். ஒருவேளை காதலர்கள் இருவரும் படுக்கையை பகிர்ந்துகொள்ள விரும்பினால், அதுகுறித்த எந்தவிதமான வெட்கம் மற்றும் சங்கடம் இருக்காது. மேலும், அவர்களுக்கு தங்களை குறித்தும், தங்களுடைய உடலை பற்றியும் நம்பிக்கை இருக்கும். இளம் பெண்களை விட வயதான பெண்கள் தங்கள் உடலையும் பாலுணர்வையும் மிகவும் சுதந்திரமாக ஏற்றுக்கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

Brea up Sex : பிரேக்-அப் செக்ஸில் ஈடுபடுவது சரியான முடிவு கிடையாது- ஏன் தெரியுமா..?

57
Image: Getty Images

அபாயம்: வயதான பெண்களுக்கு சகிப்புத்தன்மை குறைவாக உள்ளது

ஆண்களை விட வயது மூத்த பெண்களுக்கு, தங்களுடைய இளமைக் காலத்தில் இருந்ததை விடவும் சகிப்புத் தன்மை மிகவும் குறையாக இருக்கும். இதனால் வயதில் மூத்த பெண்களை காதலிக்கும் ஆண்கள், அவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டிய நிலை இருக்கும். அதுவும் அந்த பெண் அதிகமாக கோபப்படக் கூடியவராக இருந்தால், அந்த ஆண் அடிமை நிலைமைக்கு கூட தள்ளப்படலாம்.

67

திருப்பம்: வயதான பெண்களுக்கு புதிய விஷயங்கள் பிடிக்கும்

வயதான பெண்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் படுக்கையில் பரிசோதனை செய்வதை விரும்புகிறார்கள். அதற்கு காரணம் தங்கள் இளமை நாட்களில் பல்வேறு விஷயங்களை செய்து பார்க்க முயற்சி செய்திருப்பார்கள். ஆனால் இது முடியாமல் போயிருக்கும். அதனால் மீண்டும் அந்த காதல் ஒரு இளம் வயது ஆணிடம் கிடைக்கும் போது, பெண்கள் தங்களுடைய பாலியல் வேட்கைகளை முயற்சித்துப் பார்க்க விரும்புகின்றனர்.

77

அபாயம்: வயது மூத்த பெண்களிடம் ஆதிக்கம் இருக்கும்

படுக்கையில் அடிபணிய விரும்பாத ஆண்களுக்கு, வயதான பெண்ணுடன் டேட்டிங் செய்வது நல்ல முடிவு இல்லை. பெரும்பாலான வயதான பெண்கள் உறவில் ஆதிக்கம் செலுத்துவதை விரும்புகிறார்கள். அதற்கு தான் விரும்பும் ஆணை விடவும், அனுபவம் தனக்கு அதிகமாக உள்ளது என்று பெண்கள் எண்ணுவதே முக்கிய காரணமாக உள்ளது. 


 

Read more Photos on
click me!

Recommended Stories