ரொம்ப நாளா பொண்ணுங்க தொப்புள் மேல ஈர்ப்பு.. இதை சொன்னா என் மனைவி புரிஞ்சுப்பாங்களா? வாசகருக்கு நிபுணர் பதில்..

First Published | Feb 28, 2023, 5:37 PM IST

உடலின் பிற பகுதிகளை விடவும் அதிக உணர்திறன் கொண்ட எரோஜெனஸ் மண்டலமாக தொப்புள் உள்ளது. 

ஆண்களுக்கு பெண்களின் மார்பகங்கள் மீது ஈர்ப்பு உண்டு என்பது பலரும் அறிந்தது. சினிமாவில் பெண்களின் தொப்புள் கவர்ச்சி பொருளாக காட்டப்படும். இடுப்புக்கு தனி ஷாட் வைக்கும் இயக்குநர்களும் இருக்கிறார்கள். பாலியல் கற்பனையில் பெண்களின் பல அங்கங்களை ரசிக்கும் ஆண்களும் உண்டு என்றாலும் நம் வாசகருக்கு தொப்புள் மீது கொஞ்சம் ஈடுபாடு. அவரது சந்தேகத்தை காணலாம். 

வாசகரின் கேள்வி: நான் பார்க்கும் பெண்களின் தொப்புள் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது. இதுவரை அதை தவறு என நான் எண்ணவில்லை. தொப்புளை காண எனக்கு பிடித்திருக்கிறது. கன்னக் குழியை போன்ற அந்த சின்ன பள்ளம் எனக்கு விருப்பம். சில பெண்கள் பிறர் பாராட்ட தொப்புளை கவர்ச்சியாக காட்டுகிறார்கள். எனக்கு இன்னும் மணமாகவில்லை. என் வருகால துணையிடம் இதை பகிர்ந்து கொள்ள வேண்டுமா? அல்லது இந்த எண்ணத்தை மறைக்க வேண்டுமா?" என கேள்வியை முடித்திருக்கிறார். வாருங்கள் நிபுணரின் பதிலை காணலாம். 


நிபுணரின் பதில் :"தமிழ் திரைப்படங்களை எடுத்து கொள்வோம். அதில் சேலை விலகும் காட்சியை பார்த்திருப்பீர்கள். தென்றல் வந்து தீண்ட பெண்ணின் தொப்புளுக்கு ஜூம் வைத்திருப்பார்கள். ரொம்ப கவர்ச்சிகரமான பிரேம்களில் பெண்ணின் உடல் வெளிகாட்டப்படுகின்றன. தமிழ் படங்களில் மட்டுமல்ல, வரலாற்றில் உள்ள சிலைகளை போய் பார்த்தாலும் அப்படிதான் இருக்கும். தொப்புள் எப்போதுமே பார்வையாளர்கள் மனதை கொஞ்சம் ஆட்டிப்படைக்கத் தான் செய்கிறது.

தொப்புள் ரொம்ப கவர்ச்சியாகவே காட்டப்பட்டு வருவதாலோ என்னமோ, அண்மையில் நடனக் கலைஞர்கள் தொப்புளில் துளையிட ஆரம்பித்துள்ளனர். சரி நம் விஷயத்திற்கு வருவோம். நம் உடலில் தொப்புள் தான் ரொம்ப முக்கியமான ஈரோஜெனஸ் மண்டலம். பெண்களால் ஈர்க்கப்படும் ஒரு நபர், அவர்களின் தொப்புளை பார்ப்பதை கவர்ச்சியான விஷயம் தான். உள்ளுக்குள் அப்படி உணவர்வை தான் கொடுக்கும். எல்லோருக்குமா என்றால்? இல்லை சிலருக்கு தான். சிலர் வேறு பகுதியை கவர்ச்சியாக நினைக்கலாம். 

இதையும் படிங்க: உடலுறவின்போது இந்த இடங்களை தொடும் ஆண்களுக்கு.. பெண்கள் அடிமையாகிவிடுவார்களாம்.. ஏன் தெரியுமா?

பெண்ணின் இடை வளைவுகள், இடுப்பு வடிவம் சிலருக்கு கவர்ச்சியாக உள்ளது. சிலருக்கு கழுத்து, காதுமடல், கழுத்தெழும்பு, கவர்ச்சியாக தோன்றுகிறது. ஆண்கள் பெண்கள் மீது ஈர்க்கப்படுவது இயல்புதான். அதை உங்கள் வருங்கால மனைவி கொஞ்சம் புரிந்து கொள்வாரென்றால் அவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர் சங்கோஜம் படும் நபராக இருந்தால் நீங்கள் புரிந்து நடந்துகொள்ளுங்கள். ஆனால் உடலுறவில் பெண்களுக்கு தொப்புள் அதிக பாலுணர்வை தூண்டும் என கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: ரேப்பிஸ்ட் மேல் கட்டுக்கடங்காத காதல்.. அதுவும் ஜெயிலுக்கே போய் கல்யாணம் செய்த பெண்.. கூசாமல் சொல்லும் காரணம்

Latest Videos

click me!