உடலுறவு தாம்பத்திய வாழ்வின் ஒரு பகுதி. இது கணவன் மனைவி இடையே நெருக்கத்தை வளர்க்கிறது. இதனால் இல்லறம் சிறக்கும். ஆனால் பாலுறவு கொள்வதே பாவமாக கருதப்படும் இடமும் உலகில் உள்ளது தெரியுமா? இவர்களின் பாரம்பரியத்தின்படி, கணவனும் மனைவியும் ஒன்று சேர்வதே பாவ காரியம் தான். இங்கு பெண்களும் ஆண்களும் திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தை விருத்திய அடைய வைக்க நினைக்கும் போதுதான் உறவு கொள்கிறார்கள். மற்றபடி இருவரும் ஒருவரையொருவர் நெருங்கவேமாட்டார்கள்.
உலகின் மிக அழகான நாடுகளில் வடமேற்கு ஐரோப்பாவில் அமைந்திருக்கும் அயர்லாந்தும் ஒன்றாகும். அதன் பெரும்பாலான பகுதிகள் கடலின் நடுவில் தீவுகள் போல உள்ளன. இங்கு பல வகையான பழங்குடியினர் வசிக்கின்றனர். அவர்களுக்கான மரபுகளும் கூட வித்தியாசமானவை. அப்படி ஒரு பழங்குடியினர் உடலுறவை பாவமாக நினைக்கின்றனர். குடும்பத்தை வளர்க்க வேண்டிய நேரத்தில்தான் அவர்கள் கணவன் மனைவி இணைகிறார்கள்.
அயர்லாந்தில் இருக்கும் 'இனிஸ் பெக்' தீவில் வாழும் பழங்குடியினர் விசித்திரமான விதிகளுடன் வாழ்கின்றனர். இங்குள்ளவர்கள் உடலுறவின் போது நிர்வாணமாக இருக்கமாட்டார்களாம். துணிகளுடன் தான் புணர்ந்து கொள்கிறார்கள். குழந்தை பெற்ற பின் உடலுறவு கொள்வது பாவமாக கருதப்படுகிறது. இங்கு வாழும் பழங்குடியினர் பெண்களுடனான உடலுறவுகளை அடக்குமுறையாக நம்புகிறார்கள்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. அந்த நாட்களில் வீட்டில் தான் இருக்கிறார்கள். பெண்களை பொறுத்தவரை, கணவருடனான உடலுறவின் போதும் செயலற்றவராக தான் இருக்கிறார்கள். கணவர் மட்டுமே எப்போதும் முன்முயற்சி எடுக்கிறார். அந்த சமயம் இருவருக்கும் இடையே காதல் கூட இருப்பதில்லை. அவர்கள் அதை ஒரு வேலை போல செய்கிறார்கள். செக்ஸ் முடிந்த பிறகு கணவர் வேறு எங்காவது சென்று தூங்குகிறார். இந்த பழங்குடியின குழந்தைகளின் செயல்பாடுகளும் பாலின அடிப்படையிலானது. சில செயல்கள் சிறுவர்களால் மட்டுமே செய்யப்படுகின்றன. இதில் பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாதாம். சில பெண்களின் செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுவதில்லை.
இதையும் படிங்க: உடலுறவின்போது இந்த இடங்களை தொடும் ஆண்களுக்கு.. பெண்கள் அடிமையாகிவிடுவார்களாம்.. ஏன் தெரியுமா?