ஆண்கள் மிஸ் பண்ணக்கூடாத பெண்கள் நுட்பமான செக்ஸ் சிக்னல்கள்..!!

First Published | Mar 2, 2023, 1:11 PM IST

பாலியல் சார்ந்த அறிகுறிகளை வெளிப்படுத்தும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். உடல்மொழி ஆய்வாளர்களின் ஒட்டுமொத்த கருத்தை ஆய்வு செய்து, இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. எனினும், சில அறிகுறிகள் தவறாக வழிநடத்தும் மற்றும் சங்கடமான சூழ்நிலையில் உங்களைத் தள்ளலாம்
 

பாலியல் சார்ந்த சமிக்ஞைகள் என்பது அகநிலையுடன் தொடர்புடையது. அது நம்மை மீறியும் வெளிப்படலாம். அதனால் அதை ஒரு அப்பாவி நடவடிக்கையாகவே கருத வேண்டும். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது. இந்த பதிவில் பெண்களின் பாலியல் சார்ந்த சமிக்ஞைகள் குறித்து பார்க்கவுள்ளோம். ஒரு ஆணின் மீது தனக்கு இருக்கும் விருப்பத்தை வெளிப்படுத்த பெண்கள் சில நுட்பமான சமிக்ஞைகளை வெளியிடுவதுண்டு. ஆனால் அதை ஆண்கள் பெரும்பாலும் தவறாகவே புரிந்துகொள்கின்றனர். அந்த வகையில் பெண்களின் பாலியல் ஆர்வம் தொடர்பான சமிக்ஞைகள் குறித்தும், அதனுடைய வெளிப்பாடு என்ன என்பது பற்றியும் விரிவாக பார்க்கலாம்.

அசையும் ஆடைகள்

தனக்கு விருப்பமான ஆண் கவனிக்கும் வகையில் சுற்றி சுற்றி வருவது, ஒருவருடன் நின்று பேசுவது உள்ளிட்டவை ஆரம்பக்கட்ட சமிக்ஞைகள் ஆகும். ஆனால் அதையும் அந்த ‘தத்தி’ ஆண்கள் புரிந்துகொள்ளாமல் போகும் போது, தனது ஆடையை மென்மையாக்குவது போலவும், அவ்வப்போது மேல்சட்டை பொத்தான்களை சரி செய்வது போலவும் செய்தால், பெண்கள் அந்த குறிப்பிட்ட ஆண்களை அருகில் அழைக்கிறார்கள் என்று பொருள். இந்த செயல்பாடுகளை ஆண்களுக்கு நேராக நின்று செய்யும் போது, அவர்கள் விருப்பம் உறுதியாகிவிடுகிறது.

Tap to resize

கவனத்தை ஈர்ப்பது

பெண்களுக்கான தங்களுடைய பாலியல் ஈர்ப்பை வெளிப்படுத்தும் போது, அவ்வப்போது மணிக்கட்டுக்களை அசைத்துக்கொண்டே இருப்பார்கள். அதற்கு காரணம், பண்டைய காலங்களில் பெண்களின் உடல் முழுவதும் துணியால் மூடப்பட்டு இருந்தன. அவர்களுடைய மணிக்கட்டு, கழுத்து, கணுக்கால் உள்ளிட்டவை மட்டுமே வெளியே தெரியும். அதனால் தனது விருப்பத்துக்குரிய ஆணை கவருவதற்கு, பெண்கள் பெரும்பாலும் இம்மூன்று உறுப்புகளை அடிக்கடி வெளிக்காட்டிய படி இருப்பார்கள். அதை இன்றைய தலைமுறை பெண்களும் பின்பற்றி வருகின்றனர். 

வயது மூத்த பெண்கள் மீது ஆண்களுக்கு ஈர்ப்பு ஏற்பட இதுதான் காரணம்..!!

கைகள் நகர்கின்றன

மனித உடலில் சமிக்ஞைகள் என்றாலே கைகள் தான். அது பாலியல் ஈடுபாட்டின் போது, கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே வெளிப்படும். கைகள் நமக்குத் தேவையான பொருளுக்கு அருகில் செல்லும்போது, ஆர்வம் மேலோங்குகிறது. அந்த வகையில் ஒரு ஆண் மீதான ஈர்ப்பை பெண்கள் வெளிப்படுத்த கைகளை அதிகம் பயன்படுத்துவதுண்டு. டேட்டிங் செல்லும் போது, அடிக்கடி பெண்கள் ஆண்கள் அமர்ந்திருக்கும் இடத்துக்கு அருகாமை வரை கைகளை நகர்த்துவது உண்டு. அப்படியென்றால், அந்த ஆணை அப்பெண் உடனடியாக அடைய விரும்புகிறாள் என்று அர்த்தம்.

Brea up Sex : பிரேக்-அப் செக்ஸில் ஈடுபடுவது சரியான முடிவு கிடையாது- ஏன் தெரியுமா..?

உதட்டை தொடுதல்

இது மிகவும் பொதுவான சமிக்ஞையாகும், இது தன்னியக்க தொடுதல் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் யாரையாவது தொட விரும்புகிறீர்கள் என்று நினைக்கும் போது, அனிச்சையாகவே கைகள் உதடுகள் மேல் சென்றுவிடும். எதிரே நிற்கும் ஆணின் மீதான ஈடுபாட்டை வெளிப்படுத்த பெண்கள் தங்கள் முகத்தையோ அல்லது உணர்திறன் மிக்க உதடுகளை அடிக்கடி தொடுவதுண்டு. ஒருவேளை அந்த ஆணின் உதட்டை பெண் தொட்டுவிட்டால், அவர் உங்களைப் பாலியல் ரீதியாக ஈர்க்கிறார் அல்லது உங்களைப் பற்றி சிந்திக்கிறார் என்பதற்கான முக்கிய அறிகுறியாகும்.

Latest Videos

click me!