91 வயதில் காதலில் விழுந்த தொழிலதிபர்.. ரூ.66 ஆயிரம் கோடி சொத்து இருந்தா பொம்பள சுகம் கேட்கதான செய்யும்!!

First Published | Feb 27, 2023, 6:44 PM IST

பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை கொண்ட பிரபல தொழிலதிபர் மறுபடியும் காதல் வயப்பட்டுள்ளார். 

காதலுக்கு வயதோ, மதமோ, பாலினமோ தெரிவதில்லை. அது எப்போது வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அப்படிதான் 91 வயது கொண்ட டி.எல்.எப் குழுமத்தின் முன்னாள் தலைவரான குஷால் பால் சிங் காதலில் சிக்கியுள்ளார். பலரால் கே.பி.சிங் என அறியப்படும் இவர் இந்த வயதில் காதல் கொள்ள என்ன காரணம் என இங்கு காணலாம். 

குஷால் பால் சிங்கின் மனைவி இந்திரா கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சை செய்த போதும் இயற்கை அவரை 2018ஆம் ஆண்டு எடுத்து கொண்டது. கிட்டத்தட்ட 65 வருடங்களாக இணைந்து வாழ்ந்த மனைவியை பிரிந்ததால் கே.பி. சிங் மன உளைச்சல் கொண்டார். மன வருத்தம் தாளாமல் தொழில்ரீதியாகவும் கொஞ்சம் இடைவெளி எடுத்து கொண்டார். டிஎல்எப் குழுமத்தின் செயல் பணிகளில் கூட விலகிவிட்டார். 

Tap to resize

குஷால் பால் சிங்கிற்கு இப்போது மீண்டும் காதல் வந்துவிட்டது. இதை குறித்து தான் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதில் தன் காதலியின் பெயர் ஷீனா என்றும், அவள் சிறந்த மனுசி என்றும் கூறியுள்ளார். மனைவியின் பிரிவு தன்னை வாட்டியதாகவும், அப்போதுதான் ஷீனா தன் வாழ்வில் முக்கிய இடம் பிடித்ததாகவும் கூறியுள்ளார். தன் காதலி குறித்து பல சுவாரசியங்களை அவர் பேட்டியில் கூறியுள்ளார். 

காதலி தன்னை ஊக்குவிப்பதாக கூறிய குஷால் சிங், தன் காதலிக்கு உலகம் முழுக்க நண்பர்கள் இருப்பதாகவும் கூறினார். தன் மற்ற நண்பர்களுடன் காதலி ஷீனா பயணம் செய்கிறார் என புத்துணர்வுடன் சிங் குறிப்பிட்டுள்ளார். தன் காதலி போலவே அவரும் உலகம் சுற்ற விரும்புகிறாராம். குஷால் பால் சிங் லேசுபட்டவரில்லை. இவர் வெளிநாடுகளில் தான் கல்லூரி படிப்பை முடித்தார். தனது மாமனாரின் டிஎல்எப் நிறுவனத்தில் 1961-ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்துள்ளார். கிட்டத்தட்ட 50 வருடங்களாக அந்த நிறுவனத்தை தலைமை பொறுப்பில் இருந்து கவனித்துள்ளார். 

இதையும் படிங்க: நேரில் போகாம கிஸ் அடிக்க புது கருவி.. காஞ்சு போய் திரியுறவங்களுக்கு ஆறுதல்.. குஷியாகும் காதலர்கள்!!

டிஎல்எப் நிறுவனம் கட்டிய மிக சிறந்த கட்டிடங்களை குஷால் சிங் பணிகாலத்தில் கட்டப்பட்டவை தான். இவர் 2008இல் உலகின் எட்டாவது பெரிய பணக்காரராக இருந்தார். இன்றைய நிலவரப்படி கிட்டத்தட்ட 8 பில்லியன் டாலர் சொத்து வைத்துள்ளார். அதாவது 66 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இருக்கிறது. 

இதையும் படிங்க: மார்ச் மாதம் வந்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பொற்காலம்.. பண மழையில் நனைவார்கள்!!

Latest Videos

click me!