சரியான நபரை தவறான நேரத்தில் சந்தித்துவிட்டால் என்ன செய்வது?

First Published | Feb 26, 2023, 10:13 PM IST

சரியான நபரை தவறான நேரத்தில் சந்திப்பது பலருக்கும் தொடர்ந்து நீடித்து வரும் பிரச்னையாகும். காதல் உறவை விரும்புபவர்களுக்கு இப்படி நடப்பது ஒரு துரதிருஷ்டவசமானது தான். இதற்கு குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றினால் போதும். நீங்களும் காதலில் வெற்றிபெறலாம்.
 

நமக்கு பிடித்த நபரை நாம் கண்டுப்பிடிக்கும் போது, சூழல் நம்மை சேரவிடாமல் தடுக்கும். ங்கள் விரும்பும் நபருடன் டேட்டிங் செய்யமுடியாமல் போகலாம், வெவ்வேறு விதமான எதிர்பார்ப்புகள் இருக்கலாம், வாழ்க்கை மாற்றங்கள் ஏற்படலாம் அல்லது வேறு ஏதாவது காதல் அப்போது குறுக்கிடலாம். இதுபோன்ற பல சூழல்கள் ஒரு நபரை வாட்டி வதைக்கும். இதனால் காதலையும் விட்டு ஒதுங்க முடியாது, சூழலையும் கைவிட முடியாத நிலை ஏற்படும். தவறான நேரத்தில் சரியான நபரை நீங்கள் சந்தித்திருந்தால், அதை முன்னோக்கி கொண்டு செல்ல நீங்கள் என்ன செய்யலாம் என்பதற்கான வழிமுறைகள் ஒவ்வொன்றாக வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து படியுங்கள்.
 

காதலா? சுயநலமா?

இருவருக்கு வாழ்க்கையிலிருந்து வெவ்வேறு எதிர்பார்ப்புகள் இருப்பது, காதலுக்கு ஒரு பெரும் பிரச்னையாகும். காதலிக்கும் இருவரில் ஒருவர் திருமணம் செய்து குடும்பத்தைத் தொடங்க விரும்பினால், மற்றவர் உலகைப் பயணம் செய்து ஆராய விரும்பலாம். அப்படிப்பட்ட நேரத்தில் தங்களுடைய காதலை புறந்தள்ளிவிட்டு, கனவை நோக்கி பயணிக்கலாம் என்று முடிவு செய்யக்கூடாது. அது ஒரு தவறான தேர்வாகும். இரண்டையும் தக்கவைத்துக் கொள்ள முயலுவதே புத்திசாலித் தனம். அதற்கு இருவரும் ஒரு நேர்கோட்டில் வந்து சிந்திக்க வேண்டும். தற்போதைய நேரத்துக்கு எது வேண்டும்? எதை எப்போது செய்யலாம்? என்பதை நன்றாக அராய்ந்து முடிவு செய்ய வேண்டும். அதை வைத்து எதிர்காலத்தை திட்டமிட வேண்டும்.
 

Tap to resize

Image: Pexels

நீயா? நானா?

ஒரு உறவை முன்னோக்கி கொண்டு செல்ல, இருவரும் சேர்ந்து முயற்சிக்க வேண்டும். ஒருவர் தாழ்ந்து, ஒருவர் உயர்ந்து உறவை வளர்த்தெடுக்க முடியாது. நீங்கள் விரும்பும் நபர் உங்களுக்கு முக்கியமாக இருந்தால், கடினமான நேரம் கடந்து செல்லும் வரை காத்திருங்கள். இதனால் நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உணர்ச்சி ரீதியாக ஒன்றிணைந்து செயல்பட முடியும்.  
 

அன்று? இன்று?

எந்தவொரு காதலிலும் சுயநலம் இருக்கக்கூடாது. அதுதான் ஆரோக்கியமான உறவாக நிலைக்கும். உங்கள் இருவருக்கும் இடையில் உரையாடல் குறைவாக இருப்பதாக, நீங்கள் உணர்ந்தால், அதை பார்டனரிடம் வெளிப்படையாக பேசிவிடுங்கள். அப்போது தான் உறவில் அடுத்தடுத்து ஏற்படும் சிக்கல்களை சரியாக கையாள முடியும். நீங்கள் ஒரு பிரச்னையை பேசுவதற்கு அஞ்சி இருந்தால், அடுத்தடுத்து வரும் பிரச்னைகளையும் பேச முடியாமல் போய்விடும். ஒருநாளை எல்லாம் சேர்ந்து வெடிக்கும். அப்போது அந்த உறவே இல்லாமல் போய்விடும்.

ஆண், பெண் மகிழ்ச்சிக்கு சாணாக்கியர் கூறும் 5 சூத்திரங்கள்..!!

வேண்டுமா? வேண்டாமா?

ஒரு உறவில் எப்போதும் உறுதித்தன்மை இருக்க வேண்டும். உங்களுக்குள் காதல் வருவதற்கு, நீங்களும் உங்களுடைய துணையும் உறுதியுடன் இருப்பது முக்கியம். உங்களுடைய அன்புக்கு தடையாக வேலை மாற்றங்கள், இடமாற்றங்கள் அல்லது குடும்பப் பிரச்சினைகள் போன்ற பல பிரச்னைகள் வரலாம். உங்கள் புதிய உறவுக்கு நேரத்தை ஒதுக்குவது ஒரு பிரச்சனை என்றால், நீங்கள் சரியான நபரை தவறான நேரத்தில் சந்தித்திருக்க வாய்ப்புகள் அதிகம். நீங்கள் உண்மையிலேயே ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்க விரும்பினால், இந்த உறவு செயல்படும் என்று உறுதியாக இருந்தால், காதலை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 

Latest Videos

click me!