உடலுறவின் போது எதிர்பாராதவிதமாக ஆணுறை கிழிந்துவிட்டால் என்ன செய்வது..?

First Published | Feb 26, 2023, 7:25 PM IST

ஆணுறை 99.9% வரை பயனளிக்கும் என்று கூறப்பட்டாலும், மீதமுள்ள 0.1% பலரையும் கவலை அடையச் செய்கிறது. இந்த கவலையை மையமாக வைத்து பல்வேறு படங்கள் மற்றும் சீரியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

இந்தியாவில் பாலியல் நோய் பரவல் குறித்த விழிப்புணர்வு இளைய தலைமுறையினரிடம் சற்று குறைவாகவே உள்ளது. இதனால் சிறு வயதிலேயே திருமண பந்தத்தில் இணைவதும், பாலியல் நோய் பாதிப்புக்கு ஆளாகி அவதியுறுவதும் அதிகரித்து வருகின்றன. இதற்கு காரணம் ஆணுறை பயன்பாடு, கருத்தடை மாத்திரை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு எதுவும் இல்லாமல் இருப்பதே காரணம். ஒருவேளை பாதுகாப்பான முறையில் உடலுறவு கொண்டாலும், அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்காது. பெரும்பாலும் ஆணுறை 99.9% வரை மட்டுமே பயனளிக்கும். அதற்காக மீதமுள்ள 0.1% சதவீதத்தை கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது. உடலுறவின் போது பாதுகாப்பற்ற நிலை அல்லது ஆணுறை சீர்கேடு போன்றவை ஏற்பட்டால், கவலைபடக் கூடாது. இதுபோன்ற சூழலை சமாளிக்க தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
 

Male condom Vs Female condom- Which one issafer

ஆணுறை கிழிந்துபோனால் என்ன செய்வது?

எதிர்பாராதவிதமாக ஆணுறை கிழிந்துவிட்டால், உடனடியாக உடலுறவு கொள்வதை நிறுத்திவிட வேண்டும். அதையடுத்து கழிவறைக்கு சென்று ஆணுறையை கழட்டி, உங்களது உறுப்பை சுத்தம் செய்ய வேண்டும். இதனால் சிறுநீரகம் வழியாக ஏற்படக் கூடிய நுண்ணுயிர் தொற்று எதுவும் வராது. பெண்களாக இருந்தால், பெண்ணுறுப்பை சோப்புப் போட்டு நன்றாக கழுவ வேண்டும். அதற்கு முன்னதாக சிறுநீர் கழிப்பது நல்ல பயனாக இருக்கும். எனினும் பெண்கள் உடலுறவுக்கு பின் சிறுநீர் கழிப்பதால் கர்ப்பம் உருவாவது தடைபடாது என்பதற்கான சாத்தியக்கூறுகள் கிடையாது.


மருத்துவரை அணுக வேண்டும்

உடலுறவு கொள்ளும் போது உங்களுடைய துணைக்கு ஏதேனும் உடல்நலன் சார்ந்த பிரச்னை அல்லது பாலியல் நோய் இருப்பது தெரியவந்தால், ஆணுறை கிழிந்துபோகும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள். சில மருந்துக் கடைகளில் மருத்துவர் அனுமதியுடன் கருத்தடை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதை பெண்களாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக வாங்கி சாப்பிட்டுவிடுங்கள். ஒருவேளை உங்களுக்கு பாலியல் நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தோன்றினால், மருத்துவரை அணுகி அதற்குரிய பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். பாலியல் நோய் பரவல் என்பது வாய்வழி புணர்ச்சி மற்றும் ஊடுருவல் வாயிலாக மட்டுமே பரவும் என்பது தெரிந்துகொள்க

முதல் 3 நாட்கள் மிகவும் முக்கியம்


உடலுறவின் போது ஆணுறை கிழிவது அல்லது உடைப்பு போன்ற விபத்து நடந்துவிட்டால், அடுத்து வரும் 3 நாட்கள் மிகவும் முக்கியம். ஆணுறை உடைப்பு ஏற்பட்ட 72 மணி நேரத்தில் பெண்கள் அவசர கருத்தடை மாத்திரைகளை சாப்பிட்டு விட வேண்டும். அதேபோல பாலியல் நோய் பரவலுக்கான தடுப்பு மருந்துகளை சாப்பிட்டு விட வேண்டும். இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். ஒருவேளை 72 மணிநேரம் கடந்து நீங்கள் ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பாலியல் பரவல் தடுப்பு நோய்க்கான மருந்தை சாப்பிட்டால், எந்தவிதமான பயனும் கிடையாது. 

பெண்களிடம் ஆண்கள் ‘வழிவதற்கான’ முதல் 5 காரணங்கள் இதுதான்..!!

பாதுகாப்பற்ற உடலுறவு பின் நடப்பது என்ன?

உடலுறவின் போது ஆணுறை உடைப்பு ஏற்பட்டதை பலரும் கண்டுகொள்ளாமல் போகலாம். அப்படிப்பட்டவர்களுக்கு கோனோரியா மற்றும் கிளமிடியா போன்ற பாலியல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். குறிப்பிட்ட நோய் பாதிப்பை கொண்டவர்களுக்கு சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படும். இதுதான் முதற்கட்ட அறிகுறி. அதை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டால் ரத்தக்கசிவு, முறை தவறிய மாதவிடாய், வயிறு மற்றும் பிறப்புறுப்புகளில் வேதனை போன்ற அடுத்தடுத்த அறிகுறிகள் தோன்றும். இதற்கான உரிய மருத்துவ உதவி எதுவும் கிடைக்காமல் போனால், சம்மந்தப்பட்டவர்கள் உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்படலாம்.
 

Latest Videos

click me!