தாம்பத்தியம் சிறக்க- படுக்கையறைக்கான சிறந்த வாஸ்து குறிப்புகள்..!!

First Published | Feb 26, 2023, 8:28 PM IST

தம்பதிகள் காதலை பேணுவது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வித்திடுகிறது. காதல் உறவின் ரொமாண்டிசிசத்தை அதிகரிக்க வாஸ்து சாஸ்திரம் பல்வேறு எண்ணற்ற வழிமுறைகளை குறிப்பிட்டுள்ளது. தாம்பத்தியம் சிறப்பதற்கு தம்பதிகள் உறங்கும் திசை கூட முக்கியம் என்று வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது.
 

ஒவ்வொரு ஆரோக்கியமான உறவின் முதன்மையான அடித்தளம் என்பது பரஸ்பர அன்பு, அக்கறை மற்றும் மரியாதை. ஒருவேளை உங்களுக்கு மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கை அமையவில்லை என்றால், அதற்கு வாஸ்து சாஸ்திரம் பல்வேறு தீர்வுகளை வழங்குகிறது.  தம்பதிகளின் படுக்கை அறை மற்றும் படுக்கும் திசை இவை இரண்டும், இல்லறத்தை சிறப்பாக மாற்றும் என்று வாஸ்து கூறுகிறது. அதன்படி உங்கள் காதல் வாழ்க்கையை மேம்படுத்த வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள தகவல்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
 

படுக்கை இருக்கும் திசை

எப்போதும் படுக்கை அறையின் தென்மேற்கு சுவரில் இருக்க வேண்டும். அது கதவை எதிர்கொள்ளக்கூடாது. வாஸ்து படி தம்பதிகள் தூங்குவதற்கு சிறந்த நிலை தெற்கு, தென்கிழக்கு அல்லது தென்மேற்கு மட்டுமே. உறங்கும் போது வடக்கு நோக்கி தலை வைக்கக் கூடாது. இது உங்களுக்கு மன அழுத்தத்தையும் சோர்வையும் உண்டாக்கும். அறிவியில் பூர்வமாக வடக்கு நோக்கி தலைவைக்கக்கூடாது என்று அறிஞர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
 


Christmas Tree Vastu Tips

படுக்கை அறைக்கான முக்கிய அம்சங்கள்

தம்பதிகள் எப்போதும் அறையின் மூலையில் தூங்கக் கூடாது. இது வீட்டுக்குள் நேர்மறையான ஆற்றல் வருவதை தடுக்கும். நீங்கள் தூங்கும் போது, உங்களுக்கு இருபுறமும் சிறிது இடைவெளிவிட்டு படுக்கையை வைக்க முயற்சிக்கவும். கணவன் படுக்கையின் வலது பக்கத்திலும், மனைவி இடது பக்கத்திலும் இருக்க வேண்டும். எப்போதும் ஆளுக்கொரு தலையணை வைத்து மட்டுமே படுக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட தலையணைகள் ரத்த ஓட்டத்தை பாதிக்கும்.

உடலுறவின் போது எதிர்பாராதவிதமாக ஆணுறை கிழிந்துவிட்டால் என்ன செய்வது..?

படுக்கை அறையில் தவிர்க்கப்பட வேண்டியவை

ஒட்டுமொத்த அறையின் மேற்கூரையையும் தாங்கி நிற்கும் ஒரேயொரு தூண் கொண்ட பகுதியில் எப்போதும் படுத்து உறங்கக்கூடாது. இது குடும்பத்துக்கு துரதிர்ஷ்டத்தை கொண்டு வரும். படுக்கைக்கு அடியில் குப்பைகளை சேமிக்க வேண்டாம். உலோகப் படுக்கையைத் தவிர்க்கவும், அது நோயை ஏற்படுத்துகிறது. இறுதியாக, படுக்கையறையின் கீழ் தளத்தில் நேரடியாக சமையலறை இருப்பதைத் தவிர்க்கவும்.

படுக்கை அறை நுழைவு வாயில்

படுக்கை அறையின் நுழைவு வாயில் சுவர்களின் வடக்கு, மேற்கு அல்லது கிழக்குப் பக்கமாக இருக்க வேண்டும். நுழைவாயிலுக்கு ஒரே ஒரு கதவு மட்டுமே இருப்பதை உறுதி செய்ய வேண்டும், அது தெற்கு பக்க சுவரில் இருக்கக்கூடாது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, படுக்கையறையில் கனமான பொருட்களை மேற்கு, தென்மேற்கு அல்லது தெற்கு திசையில் வைக்க வேண்டும்.

வாஸ்து சாஸ்திரம் மட்டுமல்ல, ஆயுர்வேதமும் தம்பதிகள் தூங்கும் திசையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. ஆயுர்வேதத்தின்படி, தம்பதிகள் தூங்கும் சரியான திசை, தம்பதியரின் ஆரோக்கிய நன்மைகளை மேம்படுத்த உதவும். தம்பதிகள் இடது பக்கத்தில் தூங்க வேண்டும், இது தம்பதியரின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதி செய்யும். இந்த திசையில் தூங்குவது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், சுவாசத்தை மேம்படுத்தவும், இதயத்தின் அழுத்தத்தை குறைக்கவும் உதவும். வாத தோஷம் உள்ளவர்கள், பதட்டம் மற்றும் கை குளிர்ச்சி போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் தெற்கு அல்லது தென்கிழக்கு திசையில் தலை வைத்து தூங்க வேண்டும் என்று ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றன. 
 

Latest Videos

click me!