சிட்ரஸ் பழங்கள் ஆரோக்கியம் தான்.. ஆனால் இவற்றுடன் சாப்பிட்டால் ஆபத்து நிச்சயம்..!!

First Published | Jan 30, 2024, 1:14 PM IST

இத்தொகுப்பில், புளிப்புப் பழங்களுடன் எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது என்று பார்ப்போம்.
 

ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சியின் பொக்கிஷம் என்று சொல்லலாம். அவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சருமத்தை மேம்படுத்தவும் மற்றும் பல நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

ஆனால் சில உணவுகளுடன் அவற்றை உண்பது செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? எனவே, இந்த மாதிரி புளிப்புப் பழங்களுடன் எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது என்று பார்ப்போம்.
 


பால் பொருட்கள்: சிட்ரஸ் பழங்களில் உள்ள சிட்ரிக் அமிலம், பாலில் உள்ள புரதங்களை உறைய வைக்கிறது. இதனால் வயிற்றில் வாயு உருவாகிறது. மேலும் அமிலத்தன்மை அதிகரிப்பது மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே, புளிப்பு பழங்களை சாப்பிட்டவுடனே, பால் அல்லது தயிர் போன்றவற்றை சாப்பிட வேண்டாம். குறைந்தபட்சம் 2 மணிநேர இடைவெளி அவசியம்.

மாவுச்சத்துள்ள உணவுகள்: சிட்ரஸ் பழங்கள் செரிமானத்தை துரிதப்படுத்துகின்றன. ஆனால் மாவுச்சத்துள்ள உணவுகள் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் செரிமானம் குறைவதோடு, வயிற்றில் கனம், வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே, சிட்ரஸ் பழங்களை உணவின் முடிவில் சாப்பிடுங்கள். ஆரம்பத்தில் சாப்பிட வேண்டாம் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  சிட்ரஸ் பழங்களை இந்த நேரத்தில் மட்டும் சாப்பிடவே கூடாதாம்.. பல பிரச்சனைகள் ஏற்படுமாம்..

மருந்துகள்: சில மருந்துகள் சிட்ரஸ் பழங்களுடன் தொடர்பு இருப்பதால், அவை மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் ஏதேனும் மருந்துகளை எடுத்துக் கொண்டால், சிட்ரஸ் பழங்களை உட்கொள்ளும் முன் உங்கள் மருத்துவரை அணுகவும்.

இதையும் படிங்க:  Orange Juice: ஆரஞ்சு பழம் உடலுக்கு ஆரோக்கியம் தான்..ஆனால், யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா..?

இனிப்பு பொருட்கள்: சிட்ரஸ் பழங்களில் ஏற்கனவே இயற்கை சர்க்கரை உள்ளது. எனவே அவற்றில் கூடுதல் சர்க்கரை சேர்ப்பதை தவிர்க்கவும். மேலும், புளிப்பு பழங்களுடன் பிற இனிப்பு பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்கவும். இதன் காரணமாக, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு திடீரென அதிகரித்து, மோசமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இறைச்சி மற்றும் மீன்: சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலம் இறைச்சி மற்றும் மீன்களில் காணப்படும் புரதங்களின் செரிமானத்தில் குறுக்கிடுகிறது. இது வயிற்று உப்புசம், வாயு மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். எனவே, இறைச்சி அல்லது மீனுடன் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

Latest Videos

click me!