உங்கள் குழந்தை ஆரோக்கியமாக இருக்க இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிட கொடுங்கள்..

First Published Jan 29, 2024, 8:25 PM IST

குழந்தைகளின் ஆரோக்கியம் அவர்களின் உணவைப் பொறுத்தது. குழந்தைகளுக்கு வெறும் வயிற்றில் என்ன உணவு கொடுக்கிறீர்கள் என்பதும் மிக முக்கியம். 

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதிலும் குறிப்பாக, தங்கள் குழந்தைகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க பெற்றோர்கள் பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள்.

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் மனவளர்ச்சிக்கும் நல்ல உணவுமுறையை கடைபிடிப்பது மிகவும் அவசியம். குழந்தைகளின் ஆரோக்கியம் அவரவர் உணவைப் பொறுத்தது. அதுபோல், குழந்தைகளுக்கு வெறும் வயிற்றில் என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பதும் மிக முக்கியம். எனவே, அவை என்னென்ன என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்..
 

பாதாம்: குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க எப்போதும் நல்ல ஊட்டச்சத்து தேவை. குழந்தைகளுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவை தினமும் கொடுக்க வேண்டும். அவை பாதாமில் உள்ளன. எனவே, உங்கள் குழந்தைகளுக்கு வெறும் வயிற்றில் இதை கொடுங்கள். இது அவர்களின் உடலை பலப்படுத்துகிறது.

இதையும் படிங்க:  பெற்றோர்களே! 'இந்த' உணவுகள் குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும்... உங்கள் குழந்தைக்கு கொடுக்க மறக்காதீங்க..!

வாழைப்பழம்: வாழைப்பழத்தை தினமும் வெறும் வயிற்றில் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். இது அவர்களின் அனைத்து வயிற்றுப் பிரச்சனைகளையும் போக்க உதவும். முக்கியமாக, உடல் பலவீனமான குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் படிங்க:  குளிர்காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க கொடுக்க வேண்டிய சூப்பர் ஃபுட்கள்..!

ஆப்பிள்:  குழந்தைகளுக்கு தினமும் ஆப்பிள் கொடுக்கலாம். குழந்தைகளின் பார்வைத்திறனை மேம்படுத்த இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆப்பிளில் கால்சியம், இரும்பு, துத்தநாகம் போன்றவை நல்ல அளவில் உள்ளது.  

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!