மயோனைஸ் பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டு இருப்பீர்கள். இது பெரும்பாலும் பர்கர்கள், சாண்ட்விச்களில் பயன்படுத்தப்படுகிறது. இப்போதெல்லாம், பலர் டிரில் சிக்கன், சிக்கன் தந்தூரி போன்றவற்றிற்கு கூட மயோனைஸ் வைத்து சாப்பிடுவதை விரும்புகிறார்கள். இன்னும் சொல்லப் போனால், குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் இதை விரும்புகிறார்கள். அதனால் தான் என்னவோ மயோனைஸ் நமது அன்றாட உணவின் முக்கிய அங்கமாகிவிட்டது.