நம் ஊரில் பல பேருக்கு காலையில் எழுந்ததும் ஒரு கப் டீயோ, காபியோ குடிக்கவில்லை என்றால் அந்த நாளே ஓடாது. சிலருக்கு பெட் காபி, சிலருக்கு டிபனுடன் சேர்த்து காபி, இன்னும் சிலருக்கு அலுவலக இடைவேளையில் எல்லாம் டீ, காபி குடிக்கிற பழக்கம் இருக்கும். வீட்டில் பெரியவர்கள் செய்வதைப் பார்த்துதான் குழந்தைகளும் கற்றுக்கொள்வார்கள்.
எல்லாரும் டீ, காபி குடிக்கும்போது, அது எப்படி இருக்கும் என்று டேஸ்ட் பண்ணிப் பார்க்க குழந்தைகளுக்கும் ஆசை வரும். அப்புறம் மெதுவாக அவர்களும் குடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். சில வீடுகளில் பெற்றோர்களே குழந்தைகளுக்கு டீ, காபி கொடுத்து பழக்கப்படுத்துவார்கள்.
ஆனால், சின்ன வயதிலேயே டீ, காபி குடிப்பது அவர்களின் உடம்புக்கு ரொம்பவே கெடுதல். ஏனென்றால், இதில் இருக்கிற 'டானின்' (Tannin) என்கிற சத்து, குழந்தைகளின் உடம்பில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து சேருவதைத் தடுக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.