French Fries : பிரெஞ்சு ஃபிரைஸ்... இந்தப் பேரைக் கேட்டாலே நாக்குல எச்சில் ஊறும். இந்த பிரெஞ்சு ஃபிரைஸ் எங்களுடையதுன்னு பெல்ஜியம், பிரான்ஸ், ஸ்பெயின் மூணு நாடுகளும் சண்டை போட்டுக்கிட்டு இருக்கு. விஷயம் கோர்ட் வரைக்கும் போயிருக்கு!
உலகம் முழுக்க எல்லாருக்கும் பிடிச்ச ஒரு ஸ்நாக்ஸ்னா அது 'பிரெஞ்சு ஃபிரைஸ்'தான். சூடான, மொறுமொறுப்பான இந்த உருளைக்கிழங்கு துண்டுகளைப் பார்த்தாலே சாப்பிடத் தோணும். ஆனா, இது எங்க உருவாச்சுங்கிறது இன்னைக்கும் ஒரு பெரிய கேள்விக்குறி. இது தங்களோடதுன்னு பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின் மூணு நாடுகளும் பல வருஷமா சண்டை போடுது. 2005-ல் ஒரு கலைஞர், ஆர்ட் கேலரியில ரெண்டு பிரெஞ்சு ஃபிரைஸை சிலுவை மாதிரி வெச்சார். அது ஒருநாள் காணாமப்போச்சு. இந்த விஷயம் கோர்ட்டுக்குப் போய், அந்த ஆர்ட் கேலரிக்கு 21 லட்சம் ரூபாய் அபராதம் விதிச்சாங்க.
23
கதைகள்
பிரெஞ்சு ஃபிரைஸ் எப்படி உருவாச்சுன்னு பல கதைகள் இருக்கு. முதல் கதை பெல்ஜியத்தோடது. அங்க 'மியூஸ்' நதிக்கரையில வாழ்ந்த மக்கள், சின்ன சின்ன மீன்களை எண்ணெயில பொரிச்சு சாப்பிடுவாங்க. குளிர்காலத்துல ஆறு உறைஞ்சுடும், மீன் கிடைக்காது. அதனால, உருளைக்கிழங்கை நீளமா வெட்டி, மீன் மாதிரியே பொரிக்க ஆரம்பிச்சாங்க. முதல் உலகப் போரின்போது அங்க வந்த அமெரிக்க வீரர்கள் இதை சாப்பிட்டாங்க. அந்தப் பகுதி மக்கள் பிரெஞ்சு பேசினதால, இதுக்கு 'பிரெஞ்சு ஃபிரைஸ்'னு பேர் வெச்சாங்கன்னு பெல்ஜியம் சொல்லுது. ஆனா, பிரான்ஸ் வரலாற்று ஆய்வாளர்கள், '1780-களிலேயே பாரிஸ்ல இருந்த 'பான்ட் நியூஃப்' பாலத்துல தெரு வியாபாரிங்க இதை வித்தாங்க. அதனால இது பிரான்ஸ்லதான் உருவாச்சு'ன்னு சொல்றாங்க. இன்னொரு பக்கம், 'தென் அமெரிக்காவுல இருந்து ஐரோப்பாவுக்கு உருளைக்கிழங்கைக் கொண்டு வந்ததே நாங்கதான். அதனால பொரிக்கிற பழக்கமும் எங்களுடையதுதான்'னு ஸ்பெயின் வாதாடுது. ஆக, இது எங்க உருவாச்சுன்னு இன்னும் உறுதியா தெரியல.
அமெரிக்காவுக்கு பிரெஞ்சு ஃபிரைஸை முன்னாள் அதிபர் தாமஸ் ஜெஃபர்சன் அறிமுகப்படுத்தினார். 1780-கள்ல அவர் பிரான்ஸ்ல இருந்தப்போ, தன்னோட சமையல்காரருக்கு இந்த டிஷ் செய்ய கத்துக்கொடுத்து அமெரிக்காவுல அறிமுகப்படுத்தினார். ஆனா, அப்போலாம் இது இப்போ மாதிரி நீளமா இல்லாம, வட்டமா இல்லனா எலுமிச்சை தோல் வடிவத்துல இருந்துச்சு. 1920-கள்லதான் இது 'பிரெஞ்சு ஃபிரைஸ்' ஆச்சு. இன்னைக்கு ஒவ்வொரு நாட்டுலயும் இதை ஒவ்வொரு மாதிரி சாப்பிடுறாங்க. அமெரிக்கர்கள் டொமேட்டோ கெட்சப்-உடனும், பிரெஞ்சு மக்கள் கடுகு பேஸ்ட்-உடனும், பிரிட்டிஷ்காரங்க வினிகர்-உடனும், பெல்ஜியம் மக்கள் மயோனைஸ்-உடனும் சாப்பிடுறாங்க.