Which Animal Gives Black Milk : பால் என்றாலே வெள்ளை நிறம்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், உலகில் ஒரு விலங்கு கருப்பு நிறத்தில் பால் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது. அது எந்த விலங்கு, என்பது போன்ற சுவாரஸ்யமான தகவல்களை இங்கே காணலாம்.
கருப்பு நிற பாலுடன் தொடர்புடைய விலங்கு, ஆப்பிரிக்காவில் காணப்படும் பிளாக் ரெய்னோ (Black Rhino). இது, வேகமாக அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்று. கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்த காண்டாமிருகங்கள் வாழ்கின்றன.
25
உண்மையில் பால் கருப்பு நிறத்தில்தான் இருக்குமா?
பிளாக் ரெய்னோவின் பால் கருப்பு நிறத்தில் இருக்குமாம். ஆனால், அதன் தன்மை மிகவும் வித்தியாசமானது. மற்ற விலங்குகளின் பாலைப் போல இல்லாமல், இதில் கொழுப்பு குறைவாகவும், தண்ணீர் போலவும் இருப்பதால் இதில் சத்துக்களும் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
35
காண்டாமிருகங்களின் இனப்பெருக்கமும் ஒரு ஸ்பெஷல்தான்
பிளாக் ரெய்னோக்கள் மிகவும் மெதுவாக இனப்பெருக்கம் செய்யும் விலங்குகள். 4 முதல் 5 வயதில்தான் இவை இனப்பெருக்கத்திற்குத் தயாராகின்றன. இவற்றின் கர்ப்ப காலம் ஓராண்டுக்கும் மேல் நீடிக்கும். பொதுவாக ஒரே ஒரு குட்டியை மட்டுமே ஈன்றெடுக்கும்.
பிளாக் ரெய்னோவின் பாலில் வெறும் 0.2% கொழுப்பு மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது. இது பசு, எருமைப்பாலுடன் ஒப்பிடும்போது மிக மிகக் குறைவு. இவற்றின் வாழ்க்கைமுறை மற்றும் குட்டிகளை வளர்க்கும் விதம்தான் பாலின் இந்தத் தன்மைக்குக் காரணம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
55
இயற்கையின் ஆச்சரியமூட்டும் விஷயங்களில் இதுவும் ஒன்று
உலகில் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. பிளாக் ரெய்னோவின் பால் பற்றிய இந்த விஷயம், இயற்கையின் பல ஆச்சரியங்களில் ஒன்று. பால் என்றாலே வெள்ளை என்ற நமது பொதுவான எண்ணத்தை இது மாற்றுகிறது. விலங்கு உலகின் பன்முகத்தன்மைக்கு இது ஒரு சிறந்த உதாரணம்.