சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற கோதுமை சேமியா பிரியாணி!

First Published | Mar 8, 2023, 8:18 AM IST

வாருங்கள்! சுகர் பேசண்ட்களுக்கு ஏற்ற யம்மி அண்ட் டேஸ்ட்டி கோதுமை சேமியா பிரியாணியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்


 

சேமியாவில் ராகி சேமியா, கோதுமை சேமியா, அரிசி சேமியா என்று பல விதங்கள் உள்ளன. இந்த சேமியாவை வைத்து பலரும் உப்மா அல்லது பாயசம் தான் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் இன்று நாம் யம்மியான சேமியா பிரியாணி செய்ய உள்ளோம். இதனை குழந்தைகள் மிகவும் ருசித்து சாப்பிடுவார்கள். மேலும் வழக்கமாக சாப்பிடும் ரெசிப்பிகளில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கும். மேலும் இது நீரழிவு நோய் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ள சிறந்த உணவாகும்.  

வாருங்கள்! சுகர் பேசண்ட்களுக்கு ஏற்ற யம்மி அண்ட் டேஸ்ட்டி கோதுமை சேமியா பிரியாணியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை சேமியா - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பீன்ஸ் -1
பிரிஞ்சி இலை - 1
பச்சைப் பட்டாணி - கையளவு
காலிஃப்ளவர் - சிறிதளவு
உருளைக்கிழங்கு -1
இஞ்சி - பூண்டு விழுது - 1 ஸ்பூன்

anil semiya

மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
தனியாத்தூள் -1/4 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் -1/4 ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு
எண்ணெய்-தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு

செய்முறை :

முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நீட்டமாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று மல்லித்தழையை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி அதில் சேமியாவை சேர்த்து 2 நிமிடங்களுக்கு பின் அதனை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

பீன்ஸ்,கேரட்,உருளைக்கிழங்கு ஆகியவற்றை ஒரே மாதிரியான அளவில் சிறியதாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பட்டாணி, பீன்ஸ்,உருளைக்கிழங்கு, கேரட், காளிஃபிளவர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

சும்மா மென்று தின்றால் கூட போதும்.. நோயின்றி வாழ வைக்கும் வல்லாரை கீரை மகிமைகள்..!

Tap to resize

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்தாக அதில் அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

வெங்காயம் வதங்கிய பிறகு, இஞ்சி - பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட்டு பின் தக்காளி சேர்த்து அது மசியும் வரை வதக்கி விட வேண்டும்.


இப்போது வேக வைத்து எடுத்துள்ள காய்கறிகளை சேர்த்து அதில் தனியாத்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து மசாலாக்களின் கார வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.

பின்னர் வடிகட்டி வைத்துள்ள கோதுமை சேமியா சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் வரை வேக வைத்து பின் மல்லித்தழையை தூவி இறக்கினால் சுவையும் சத்தும் நிறைந்த கோதுமை சேமியா பிரியாணி ரெடி.

Latest Videos

click me!