கோடை காலத்தில் வால்நட் சாப்பிடுவது நல்லதா? தெரிந்தால் அசந்து போவீங்க..!

First Published | Apr 21, 2023, 11:50 AM IST

வால்நட் ருசியானது மற்றும் அதிக சத்து நிறைந்தது. இது நம் உடலில் நிறைந்திருக்கும் கொழுப்புகளை கரைத்து, தேவையான ஆரோக்கியத்தை உடலுக்கு கொடுக்கிறது. ஆரோக்கியம் நிறைந்த இந்த வால்நட்டை கோடை காலத்தில் சாப்பிடுவது நல்லதா? என்று இக்கட்டுரையின் மூலம் காணலாம்.

வால்நட் ருசியானது மற்றும் அதிக சத்து நிறைந்தது. இது நம் உடலில் நிறைந்திருக்கும் கொழுப்புகளை கரைத்து, தேவையான ஆரோக்கியத்தை உடலுக்கு கொடுக்கிறது. ஆரோக்கியம் நிறைந்த இந்த வால்நட்டை கோடை காலத்தில் சாப்பிடுவது நல்லதா? என்று இக்கட்டுரையின் மூலம் காணலாம்.

வால்நட் குளிர்ச்சி காலத்தில் விளையக் கூடியது. ஆனால் கோடைகாலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளில் வால்நட் முக்கிய பங்கு வகிக்கிறது. 

வால்நட் உஷ்ணத்தை ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருளாகும். எனவே வால்நட்டை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவ்வாறு சாப்பிட்டால் அதில் இருக்கும் உஷ்ணம் தணியும். 

Tap to resize

வால்நட்டில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. இது உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும், நீரிழிவு மற்றும் இதய நோய்களை தவிர்க்க உதவுகிறது. குறிப்பாக வால்நட்டை நாள் ஒன்றுக்கு 28 கிராமுக்கு மேல் சாப்பிடக்கூடாது. மேலும் இது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.

வால்நட்டில் வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் அதிகம் இருக்கிறது. எனவே அதனை சாப்பிட்டால் அதில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும். அவ்வாறு செல்லும் போது, அவை மூளையின் செல்களை புத்துணர்வு பெற செய்யும். இதனால்  வேளையில் நன்கு ஈடுபடலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கோடை காலத்தில் வால்நட் பால் அருந்துவது மிகவும் நல்லது. ஊற வைத்த வால்நட்டை மிக்ஸியில் அடித்து அதிலிருந்து பால் எடுத்து அருந்த வேண்டும் . அதனுடன் பேரிச்சம் பழம் மற்றும் தேன் சேர்த்து சாப்பிட்டால் மிகுந்த சுவையை கொடுக்கும். இரவில் தூங்க செல்வதற்கு முன்பாக ஊறவைத்த வால்நட்டை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.

வால்நட்டில் அதிகம் புரதம் இருக்கிறது. எனவே இது முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. மேலும் இது முடி கொட்டுவதையும் தடுக்கிறது.

இதையும் படிங்க: கோடைகாலத்தில் பேரிச்சம் பழம் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?...அப்போ உடனே இதை படியுங்கள்..!

Latest Videos

click me!