Ugadi Recipes 2024 : தெலுங்கு புத்தாண்டை வரவேற்கும் பாரம்பரிய உணவுகள்...

First Published | Apr 9, 2024, 9:25 AM IST

உகாதி பண்டிகையில் கண்டிப்பாக செய்ய வேண்டிய பாரம்பரிய உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்..

Image: Freepik

உகாதி என்பது தெலுங்கு புத்தாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் பண்டிகையாகும். ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் இந்த பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு உகாதி ஏப்ரல் 9-ம் தேதி, இன்று கொண்டாடப்படுகிறது..

உகாதி தினத்தன்று வீட்டில் பூக்கள், மாவிலை தோரணம் மற்றும் ரங்கோலி ஆகியவை மூலம் வீட்டை அலங்கரித்து, புத்தாடை அணிந்து தெலுங்கு பேசும் மக்கள் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். மேலும் தங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கின்றனர். உகாதி பண்டிகையில் முக்கிய பங்கு வகிப்பது உணவு. 


உகாதி பச்சடி இல்லாமல் உகாதி பண்டிகை இருக்காது. இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, துவர்ப்பு மற்றும் கசப்பு என அறுசுவைகளை சேர்த்து இந்த பச்சடி செய்யப்படுகிறது. யுகாதி பூஜையின் போது மக்கள் இந்த சிறப்பு பச்சடியை நைவேத்யமாக படைக்கப்படுகிறது.

உகாதி பச்சடி

உகாதி பச்சடி கொண்டாட்டத்திற்காக தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். புளி,  மாங்காய் வேப்பம்பூ, வெல்லம், உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் தூள் அல்லது கருப்பு மிளகு தூள் ஆகியவற்றைக் கொண்டு இந்த உணவு தயாரிக்கப்படுகிறது. முதலில் வெல்லத்தை அரை கப் தண்ணீரில் கரைத்து வைக்க வேண்டும். பின்னர் புளியை கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் நறுக்கி வைத்த மாங்காய், வேப்பம்பூ, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்தா உகாதி பச்சடி ரெடி.

பருப்பு பாயாசம்

உகாதி நாளில் பாரம்பரியமாக செய்யப்படும் உணவுகளில் பருப்பு பாயாசமும் ஒன்று. வெல்லம் மற்றும் தேங்காய்ப் பாலுடன் ஏலக்காய் சுவையுடன் செய்யப்படும் சுவையான உணவாகும்.

எலுமிச்சை சாதம்

இது சித்ரான்னா அல்லது நிம்மகயா புளிஹோரா என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் இது ஒரு பிரபலமான தென்னிந்திய உணவாகும். 

கோசம்பரி

இது கர்நாடகாவில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு அடிப்படை, எளிதான தென்னிந்திய சாலட் ஆகும். இது பருப்பு, வெள்ளரி, தேங்காய், எலுமிச்சை சாறு, மூலிகைகள் மற்றும் தென்னிந்திய மசாலா மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு பதப்படுத்தப்பட்ட சாலட் ஆகும்.

போபட்லு

பொப்பட்லு, ஹோலிகே அல்லது ஒப்பாட்டு என்றும் அழைக்கப்படும், இது ஒரு தென்னிந்திய பண்டிகை இனிப்பு ஆகும். வேகவைத்து அரைத்த பருப்பு, வெல்லம், ஏலக்காய் தூள் மற்றும் ஜாதிக்காய் ஆகியவற்றின் கலவையால் நிரப்பப்படுகின்றன.

Latest Videos

click me!