பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் பொதுவாக இரவில் முழுமை உணர்வை ஏற்படுத்தும். ஏனெனில் இதில் அதிக அளவு புரதம் மற்றும் டிரிப்டோபான் உள்ளது. இது நல்ல தூக்கத்திற்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. உதாரணமாக, கொண்டைக்கடலையில் இரும்புச்சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் கே, சி மற்றும் பி-6 ஆகியவையும் உள்ளன. இது அவர்களுக்கு சிறந்த, சத்தான இரவு உணவாக அமைகிறது. உங்கள் குழந்தையின் உணவில் சேர்க்க இதை வேகவைத்து மசித்து கொடுங்கள்.