Brinjal Chutney: கத்தரிக்காய் சட்னி – ஒருமுறை செய்து பாருங்க..நாக்கை சப்புக்கொட்ட வைக்கும்

Published : Sep 14, 2026, 01:33 PM IST

Brinjal Chutney: கத்தரிக்காய் பிடிக்காதவர்கள்கூட விரும்பி சாப்பிடும் வகையில் சுவையான கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி? தேவையான பொருட்கள், எளிய செய்முறை மற்றும் சுவையான தாளிப்பு குறிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
14
கத்தரிக்காய் சட்னி

கத்தரிக்காய் என்றாலே சிலர் முகம் சுளிப்பார்கள். ஆனால், அதே கத்தரிக்காயை வைத்து மணமணக்கும் சட்னி செய்தால், “இது கத்தரிக்காயா?” “இன்னும் கொஞ்சம் போடுங்க!” என்று கேட்கும் அளவுக்கு சுவையாக இருக்கும். வதக்கிய கத்தரிக்காயுடன் வெங்காயம், தக்காளி, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்தால் கிடைக்கும் இந்த சட்னி, இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் சூடான சாதத்துக்கும் அட்டகாசமான காம்பினேஷன். அதிக நேரம் செலவிடாமல், வீட்டில் எளிதாக கிடைக்கும் பொருட்களைக் கொண்டே இந்த காரசாரமான சட்னியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

24
தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் – 2

பெரிய வெங்காயம் – 1

தக்காளி – 1

காய்ந்த மிளகாய் – 3

பூண்டு – 4 பல்

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு

தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டீஸ்பூன்

தாளிக்க:

கடுகு – ½ டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – ½ டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

34
செய்முறை

படி 1: முதலில் கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கத்தரிக்காய் துண்டுகளை நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

படி 2: அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை வதக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி, புளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

படி 3: வதக்கிய பொருட்கள் ஆறியதும், கத்தரிக்காய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.

44
கத்தரிக்காய் சட்னி ரெடி

படி 4: கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவும்.

படி 5: சூடான இட்லி, தோசை அல்லது சாதத்துடன் பரிமாறினால் சுவை அசத்தலாக இருக்கும். குறிப்பாக சூடான சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து இந்த சட்னியை கலந்து சாப்பிட்டால், இன்னும் ஒரு வாய் கேட்க வைக்கும் அளவுக்கு சுவையாக இருக்கும்!

Read more Photos on
click me!

Recommended Stories