வெயில் காலத்தில் வயிறு குளிர! இந்த புதினா பானம் குடித்து பாருங்கள்..

First Published | Apr 30, 2023, 12:29 PM IST

வெயில் காலத்தில் வயிற்றையும் உடலையும் குளுமையாக வைத்திருக்க புதினா ட்ரிங் அருந்துங்கள். 

கோடை காலத்தில் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும். உடல் உஷ்ணம், செரிமான பிரச்சனைகள், முகப்பரு, வாய்ப்புண் போன்ற பல நோய்கள் வரும். இதை தவிர்க்கவும், உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைக்கவும் சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ளவேண்டும். தினமும் ஆரோக்கியமான கோடைகால பானம் ஏதேனும் அருந்துங்கள். 

கோடைகாலத்தில் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள இளநீர், மோர், பழச்சாறு போன்றவை எடுத்து கொள்ளுங்கள். இதனால் வயிறு குளிர்ந்துபோகும். செரிமான செயல்முறையை எளிதாக்கும். கோடையில் புதினாவை கண்டிப்பாக சாப்பிடவேண்டும். புதினா வயிற்றை குளிர்வித்து, அமிலத்தன்மையை குறைக்கும். சாப்பாட்டிற்கு பிறகு புதினா நீர் அருந்துவதால் செரிமானம் மேம்படும். வயிற்றுவலியை குறைப்பது மட்டுமின்றி, வீக்கத்தையும் முற்றிலும் தணிக்கும். புதினா பானத்தை எப்படி தயார் செய்வது என்று இங்கு காணலாம். 

Latest Videos


தேவையான பொருள்கள் 

•தேன்

• உப்பு

• சீரகம்

• எலுமிச்சை

செய்முறை

முதலில் புதிய புதினா இலைகளை கழுவி எடுத்து கொள்ளுங்கள். பின்னர் புதினா இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவைக்கேற்ப தேன் மற்றும் கல் உப்பு சேர்க்கவும். இதனுடன் வறுத்த சீரகம், எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இதனுடன் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றுங்கள். இதனை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். பின்னர் வடிகட்டி பரிமாறலாம். 

உங்கள் வசதிக்கேற்ப புதினா இலைகள், பிற பொருட்களை தண்ணீர் சேர்க்காமல் முதலில் அரைக்கவும். அதனை ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கலக்கவும். இதனை வடிகட்டி பரிமாறுங்கள். கோடையில் சோடா அல்லது குளிர் பானங்களுக்கு பதிலாக புதினா நீர் குடியுங்கள். உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். 

click me!