நீங்கள் டீ பிரியரா? அப்போ இந்த உணவுகளுடன் குடிக்காதீர்..!!

First Published | Apr 29, 2023, 7:58 PM IST

டீ பிரியரா நீங்கள்? அப்போ டீ குடிக்கும்போது என்னென்ன உணவுகளைச் சேர்த்து சாப்பிடக் கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க...

காலை எழுந்ததும் டீ குடிப்பது சிலருக்கு பழக்கம். மேலும் சிலர் டீயுடன் நொறுக்கு தீனி அல்லது வேறு ஏதோ ஒரு உணவுப் பொருட்களை சாப்பிடுவது பழக்கம். அவ்வாறு சாப்பிடுவது நல்லதா? எனவே டீ குடிக்கும் போது என்ன மாதிரியான உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

எலுமிச்சை ஜூஸ்:

டீ குடிப்பதற்கு முன்னும் பின்னும் எலுமிச்சை ஜூஸ் குடிக்க வேண்டாம். ஏனெனில் அது வீக்கத்தை ஏற்படுத்தலாம்.
 

Latest Videos


பழங்கள்:

நீங்கள் காலை உணவாக பழத்தை உட்கொள்ளும் போது டீயுடன் அவற்றை சாப்பிட கூடாது. மேலும் நீங்கள் காலை டீ அருந்துபவராக இருந்தால்  இவை இரண்டிற்கும் இடைவெளியை கடைப்பிடிக்கவும்.

காய்கறிகள்:

இரும்புச்சத்து நிறைந்துள்ள காய்கறிகளை டீயுடன் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் டீஅவை இரும்புச் சத்து உறிஞ்சுதலை கட்டுப்படுத்துகிறது ஆகையால் டீயுடன்  காய்கறிகளை சாப்பிடும் போது அவற்றின் ஆரோக்கிய நன்மை இழக்கிறோம்.

கடலை மாவு:

சிலர் டீயுடன் பக்கோடா, பஜ்ஜி போன்றவை சாப்பிடுவது பிடிக்கும். ஆனால் இவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பக்க விளைவுகள் ஏற்படும்.

இதையும் படிங்க: அம்பானி வீட்டு மூத்த மருமகளா இவங்க? ஆடம்பரத்திற்கு அளவேயில்லை.. பல கோடிக்கு நெக்லஸ்? இன்னும் இருக்கு!

குளிர்ச்சியான உணவுகள்:

சூடான டீயுடன் ஐஸ்கிரீம் போன்ற குளிர் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவை செரிமானப் பிரச்சினைகளை உண்டாக்கும். குறிப்பாக வெவ்வேறு வெப்பநிலை கொண்ட இந்த உணவுகளை சாப்பிடும் போது சில்ருக்கு வாந்தி மற்றும் குமட்டல் ஏற்படுத்தும்.

பரோட்டா:

பரோட்டா உடன் டீ குடிப்பதை சிலர் பழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு சாப்பிட்டால் அது செரிமான பிரச்சினைக்கு வழிவகுக்கும். மேலும் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
 

பிஸ்கட்:

குறிப்பாக டீயுடன் பிராந்திய உணவுகளான பிஸ்கட் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் அது நம் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

click me!