டீயுடன் பரோட்டா சாப்பிடும் நபரா நீங்கள்? அப்போ நீங்க தான் இதை கண்டிப்பா படிக்கணும்..!!!

First Published | Apr 28, 2023, 8:58 PM IST

டீயுடன் கூடிய பரோட்டா மிகவும் பிடித்த இந்திய சிற்றுண்டி. ஆனால் டீயுடன் பரோட்டா சாப்பிட்டால் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? இது குறித்து விரிவாக இப்பதிவில் காணலாம்...

காலை உணவாக சூடான பரோட்டாவை சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது இல்லையா? அதுவும் காலை உணவாக பரோட்டாவுடன் டீ குடிப்பது மிகவும் பிடிக்கும். பரோட்டாவை டீயுடன் சாப்பிடுவது மிகவும் சுவையாக இருந்தாலும், ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இது நல்ல கலவையாக இருக்காது. இதனால் டீயுடன் பரோட்டா சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு. நீங்கள் டீ மற்றும் பரோட்டா சாப்பிடுவதை விரும்புகிறீர்களா?

டீயுடன்  பரோட்டா சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்:

அசிடிட்டி பிரச்சனை:

பராட்டாவுடன் டீ குடித்தால், அசிடிட்டி பிரச்சினை மற்றும் வீக்கத்துடன் ஆசிட் ரிஃப்ளக்ஸ் பிரச்சனைகளும் வரும். குறிப்பாக டீ வயிற்றில் அமில சமநிலையை சீர்குலைப்பதாக சொல்லப்படுகிறது. எனவே டீயுடன் பரோட்டா சாப்பிட்டால் வயிறு ஆரோக்கியம் கெடும்.

Tap to resize

இரத்த சோகை:

 டீயில் உள்ள பீனாலிக் வேதிப்பொருள் காரணமாக வயிற்றின் உள்புறத்தில் இரும்பு வளாகங்கள் உருவாகின்றன. இது இரும்பை உறிஞ்சுவதை நிறுத்துகிறது. எனவே, டீயுடன்   பராட்டா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட கூடாது.

ஊட்டச்சத்துக்களைத் தடுக்கிறது:

டீயுடன் பரோட்டா சாப்பிடுவதால் உடலுக்கு செல்ல வேண்டிய ஊட்டச்சத்துக்களை அவை தடுக்கிறது. இதனால் உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைப்பதில்லை. எவவே பரோட்டாவை டீயுடன் சாப்பிட வேண்டாம். 

இதையும் படிங்க: Watermelon: வெயில் நேரத்தில் சூட்டை தணிக்க தர்பூசணி.. ஆனால் இந்த 3 உணவுகளோடு மட்டும் சாப்பிடாதீங்க!

எப்போது டீ குடிப்பது நல்லது:

நீங்கள் டீ குடிக்க விரும்பினால், சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். எந்த உணவையும் சாப்பிட்டு குறைந்தது 45 நிமிடங்களுக்குப் பிறகு தான் டீ குடிப்பது நல்லது. இவ்வாறு குடித்தால் உடலில் எவ்வித கேடும் ஏற்படாது மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

Latest Videos

click me!