நாள் முழுக்க சுறுசுறுப்பா இருக்க பேரீச்சம் பழம் 1 போதும்.. காலையில் இதை சாப்பிட்ட டயர்டே ஆகமாட்டிங்க..

First Published | Mar 11, 2023, 8:00 AM IST

ஆரோக்கியமான உணவுகளுடன் நாளைத் தொடங்கினால் அந்த நாளே சுறுசுறுப்பாக இருக்கும். 

காலை எழுந்ததும் நம் கைகள் டீ, காபியை தான் கேட்கும். அதில் உள்ள காபின் என்ற பொருள் உடனடி ஆற்றகை தரும். ஆனால் இவை இரண்டும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அத்தகைய சூழலில் உள்ளேயும், வெளியேயும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் உணவுகளை தெரிந்து கொண்டு உண்பது அவசியம். அந்த உணவுகளுடன் தான் உங்கள் நாளையும் தொடங்க வேண்டும்.  

நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள உணவுகள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் உதவுகின்றன. உங்களுக்கு ஆற்றலைத் தரும் உணவைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். 

Tap to resize

நாள்தோறும் காலையில் 4 முதல் 5 பேரீச்சம்பழங்களை உட்கொண்டால், நாள் முழுவதும் நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். உண்மையாகத் தான்.. இயற்கை சர்க்கரை பேரீச்சம்பழத்தில் காணப்படுகிறது. அதனால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். இதில் கிடைக்கும் வைட்டமின்களும் தாதுக்களும் உங்களை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. 

நாள்தோறும் பாதம் உண்பது சூப்பர் பலன்களை வாரி வழங்கும். பாதாமில் புரதம், நார்ச்சத்து, மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு ஆகியவை உள்ளன. அதிலும் நல்ல கொழுப்பு தாங்க. பயப்படாம காலையில் சாப்பிடலாம். நாள்தோறும் காலை எழுந்ததும் ஊறவைத்த பாதமை தோல் நீக்கி உட்கொண்டால், அதிலிருந்து உடனடி ஆற்றல் கிடைக்கும். இதனால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். 

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து, பாஸ்பரஸ், தாதுக்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் கொட்டி கிடக்கின்றன. இதை உண்பதால் நாள் முழுவதும் நீங்கள் உற்சாகமாக இருக்கலாம். காலையில் பழங்கள் உண்பதும் ரொம்ப நல்லது. இது உங்களுடைய மூட்டுகளுக்கு நல்லது. ஓடியாடி வேலை செய்பவர்கள் அடிக்கடி ஆரஞ்சு சாப்பிடலாம். 

இதையும் படிங்க: வெயில் காலத்தில் மாவு, தயிர் ரொம்ப நாட்கள் புளிக்காமல் ப்ரெஷ்-ஆ இருக்க..இந்த ஒரு விஷயத்தை செய்யுங்க போதும்..!

ஒரு கைப்பிடி வறுத்த எள்ளை உண்பதன் மூலமாக உங்கள் நாளைத் தொடங்கலாம். இதனால் அந்த நாள் நல்ல சுறுசுறுப்பாக இருக்கும். மகிழ்ச்சி ஹார்மோனை தூண்டி நாளை சந்தோஷமாக தொடங்க விரும்பினால் எலுமிச்சை நீருடன் உங்கள் நாளை தொடங்குங்கள். இந்த வேகாத வெயிலில் நீரிழப்பு பிரச்சனையை தடுப்பதற்கு எலுமிச்சை உங்களுக்கு உதவும். நல்ல நச்சு நீக்கியாகவும் செயல்படும். 

இந்த உணவுகளை உண்பதன் மூலம் உங்களுடைய நாளை ஆரோக்கியமாக தொடங்குங்கள். இனிய காலை..! 

இதையும் படிங்க: தலைமுடி காடு மாதிரி அடர்த்தியா வளர.. வாரம் இருமுறை கிராம்பு.. இப்படி பண்ணுங்க முடி கட்டுக்கடங்காம வளரும்...

Latest Videos

click me!