குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ்களில் மிக முக்கியாயமானது சிப்ஸ் என்று சொல்லலாம். சிப்ஸ் என்று சொல்லும் போது உருளை சிப்ஸ் ,நேந்திரம் சிப்ஸ், பாகற்காய் சிப்ஸ், மரவல்லிக்கிழங்கு சிப்ஸ் என்று பல விதமான சிப்ஸ்கள் உள்ளன.
ஒவ்வொரு சிப்ஸும் அதன் தனித்துவமான சுவையை அள்ளித்தரும். எந்த வகை சிப்ஸ் என்றாலும் தட்டில் வைத்துக் கொடுத்தால் ஒரே இடத்தில் அமர்ந்து சத்தம் மில்லாமல் அனைத்தையும் காலி செய்து வைத்து தான் விளையாடக் கூட செல்வார்கள் . அப்படி அவர்கள் மிகவும் விரும்பி ருசித்து சாப்பிடக்கூடிய சிப்ஸ்ஸில் ஒரு புது வகையை தான் இன்று நாம் காண உள்ளோம். என்ன சிப்ஸ் என்று யோசிக்கிறீர்களா?
பலாக்காய் சிப்ஸ் தான் அது. என்ன பலாக்காய் வைத்து சிப்ஸ் செய்ய முடியுமா என்று யோசிக்கிறீர்களா?
பலாக்காயின் பயன்கள்:
பலாக்காயில் இரும்பு, கால்சியம், புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
பலாக்காயிலிருக்கும் "ஐக்சுலின்" எனும் சத்து நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. மேலும் லிக்கினேஸ், சபோனின், ஐசொபிளாவின் போன்ற தாவர சத்துக்களும் உள்ளதால் இது மிகச் சிறந்த ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆக இருக்கிறது