சூடான சாதத்துடன் இந்த ஹரியாலி முட்டை கிரேவி மட்டும் போதும் !வேறு எதையும் தேடவே மாட்டார்கள்.

First Published | Mar 9, 2023, 10:39 PM IST

சப்பாத்தி, நாண் போன்றவைக்கு பெஸ்ட் சாய்ஸ்ஸாக ஹரியாலி முட்டை கிரேவி இருக்கும். மேலும் சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும் வேறு எதையும் தேடவே மாட்டார்கள். இந்த ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தினமும் முட்டை சாப்பிடுவது உடலுக்கு பல விதங்களில் நன்மை தருகிறது. ஆனால் எப்போதும் அவித்தோ,பொடிமாஸ் , ஆம்லெட் போன்றவைகளை செய்து கொடுத்தால் யாராக இருந்தாலும் அலுத்து தான் சாப்பிடுவார்கள். முட்டையை வைத்து ஹரியாலி கிரேவி ரெசிபியை 1 முறை செய்து கொடுங்க. வழக்கமாக செய்கின்ற கிரேவியை போல் அல்லாமல் இதன் சுவை சூப்பராக இருக்கும்.

இதனை சப்பாத்தி, நாண் போன்றவைக்கு பெஸ்ட் சாய்ஸ்ஸாக ஹரியாலி முட்டை கிரேவி இருக்கும். மேலும் சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும் வேறு எதையும் தேடவே மாட்டார்கள். ஒரு முறை செய்து தந்தால் இதனை மீண்டும் மீண்டும் செய்து தரும் படி வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள். இந்த ஹரியாலி முட்டை கிரேவியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


 

தேவையான பொருட்கள்:

முட்டை - 5
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 2
பிரியாணி இலை - 1
கரம் மசாலா - 1 ஸ்பூன்
மல்லித் தூள் - 2 ஸ்பூன்
பிரஷ் க்ரீம் - 2 ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு

ஹரியாலி மசாலாவிற்கு:

பச்சை மிளகாய் - 3
புதினா - 1 கட்டு
மல்லித்தழை - 1 கட்டு (பெரியது)

வெங்காய மசாலாவிற்கு:

இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 4 பற்கள்
வெங்காயம் - 1

இனி சப்பாத்தி என்றால் "சில்லி சப்பாத்தி" தான் செய்ய வேண்டும் என்று கேட்பார்கள்!

செய்முறை:

முதலில் முட்டைகளை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி 2 விசில் வைத்து வேக வைத்து பின் ஓடுகளை நீக்கி இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

Latest Videos


பின் இஞ்சி, வெங்காயம், புதினா, மல்லித்தழை, பச்சை மிளகாயை முதலியவற்றை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மிக்சி ஜாரில் புதினா,மல்லித்தழை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதே மிக்சி ஜாரில் இஞ்சி,பூண்டு மற்றும் வெங்காயம் ஆகியவை சேர்த்து அரைத்து அதனையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் 1 கடாய் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்த பின்னர், அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை ஆகியவை சேர்த்து தாளித்து விட்டு , பின் அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.

அடுத்தாக அதில் தனியா தூள் மற்றும் கரம் மசாலாசில நிமிடங்கள் வதக்கி விட்டு பின் அரைத்து வைத்துள்ள ஹரியாலி மசாலா ,உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

பின் வெட்டி வைத்துள்ள முட்டைகளை போட்டு மூடி வைத்து, சுமார் 5 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைத்து வேக வைத்து இறுதியாக பிரஷ் க்ரீம் சேர்த்து இறக்கினால், சூப்பரான சுவையில் ஹரியாலி முட்டை கிரேவி ரெடி!

click me!