வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடித்தால்.. அடிக்குற வெயிலுக்கு உங்க கொழுப்பு வெண்ணெய் மாதிரி கரைஞ்சிடும்

First Published | Mar 9, 2023, 7:30 AM IST

உடல் எடையை கட்டுக்குள் வைத்து கொலஸ்ட்ராலை குறைக்க சுரைக்காயை எப்படி பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

சுரைக்காய் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, இரும்பு, போலேட், மெக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம் ஆகிய பல சத்துக்கள் நிறைந்தது. நீர்ச்சத்து மிகுந்த காய். இதை சாப்பிடுவதன் மூலமாக வயிறு ஆரோக்கியமாக இருக்கும். இதை கூட்டு, குழம்பு வைத்து உண்பார்கள். ஆனால் இதை ஜூஸ் போல அருந்தினால் வேற லெவல் நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? 

சுரைக்காய் சாறு குடிப்பதால் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும். இதன் செய்முறையும் எளிது. வெப்பம் தகிக்கும் இந்த கோடைகாலங்களில் சுரைக்காய் சாறு குடிப்பது நல்ல பலன்களை தரும். சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு நன்கு குணமாகும். 

Tap to resize

காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் சீக்கிரமே பலன் கிடைக்கும். உடல் உஷ்ணம் குறையும். தாகம் ஏற்படாது. எப்பேர்ப்பட்ட சிறுநீர் கடுப்பும் தணியும். உடலில் நீர்ச்சத்து அதிகமாகும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது நல்ல பலனளிக்கும். 

இதையும் படிங்க: தினமும் தூங்கமுடியாம அவஸ்தையா? இதை செய்தால் குழந்தைங்க மாதிரி செம்ம தூக்கம் வரும்.. மூளை சுறுசுறுப்பா மாறும்..

தேவையான பொருட்கள்.. 

• ஒரு சுரைக்காய்

• 1/2 டீஸ்பூன் சீரக தூள்

• 1/2 தேக்கரண்டி கருப்பு மிளகு தூள்

• ஒரு துண்டு இஞ்சி

• 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு

• புதினா இலைகள்

• ஒரு டம்ளர் தண்ணீர்

• உப்பு, ஐஸ் கட்டிகள் (தேவைப்பட்டால் போட்டுக் கொள்ளுங்கள்.

செய்முறை

• சுரைக்காய் சாறு தயாரிக்க, முதலில், ஒரு சுரைக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை நன்றாக தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டவும். இன்னொரு புறம் புதினா இலைகளை கழுவி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். 

• சுரைக்காயை, சீரகத்தூள், கருப்பு மிளகு, இஞ்சி துண்டுகளுடன் நன்கு அரைத்து கொள்ளுங்கள்.

• சிறிது உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். அரைத்த சுரைக்காய் சாறுடன் குளிர்ந்த நீரை சேர்க்கவும். 

• இந்த சாற்றை வடிகட்டி ஒரு டம்ளரில் ஊற்றி அதன் மேல் இரண்டு மூன்று ஐஸ் கட்டிகளை போட்டால் சத்தான சுரைக்காய் சாறு பாட்டில் தயார் ஆகிவிடும். இதை அருந்தினால் கொலஸ்ட்ரால் குறையும். கோடை காலத்தில் அருந்த ஏற்ற பானம். 

இதையும் படிங்க: சும்மா மென்று தின்றால் கூட போதும்.. நோயின்றி வாழ வைக்கும் வல்லாரை கீரை மகிமைகள்..!

Latest Videos

click me!