இல்லத்தரசிகளுக்கு காலைல என்ன டிபன் செய்றதுங்கிறதே பெரிய கவலை. குழந்தைகளை ஸ்கூலுக்கு ரெடி பண்ணிட்டு, ஆபீஸுக்கும் கிளம்புற அந்த அவசரத்துல டக்குனு செய்யக்கூடிய ஒரு டிபன் தான் உப்மா. ஆபீஸ் போற பெண்கள் காலைல அவசரமா செய்ற டிபனும் இந்த உப்மா தான். ஆனா தினமும் ஒரே மாதிரி சுவையிலயோ, சரியான பதத்துலயோ அது அமையாது. சில சமயம் செஞ்ச அஞ்சு நிமிஷத்துலயே கல்லு மாதிரி ஆயிடும். சில சமயம் உதிரி உதிரியா வரும். இதனாலயே குழந்தைகளுக்கு உப்மா பிடிக்காம போகலாம். காலை நேர பரபரப்புலயும், பார்த்த உடனே குழந்தைகளுக்கு சாப்பிட தோணுற அளவுக்கு சுவையா உப்மா எப்படி செய்றதுன்னு இங்க பார்க்கலாம்.
25
உப்மா டேஸ்டா செய்வது எப்படி?
தென்னிந்திய ஸ்டைல் உப்மா ரொம்பவே சுவையா இருக்கும். இதுக்கு காரணம் அதுல சேர்க்குற காய்கறிகள் தான். இதுக்கு நிறைய பொருட்கள் தேவையில்லை. வீட்ல இருக்குற ரவை, காய்கறிகள், மசாலா பொருட்கள் இருந்தாலே போதும், சில நிமிஷங்கள்ல உப்மா ரெடி. ரவையை வறுத்து, காய்கறிகள், மசாலா சேர்த்து உதிரி உதிரியா வேகுற வரைக்கும் கிளறினா உப்மா தயார். இது சத்தானது மட்டுமில்ல, காலைல வயிறை நிரப்புற ஒரு சூப்பர் டிபன். உங்களுக்கு பிடிச்ச நிறத்துலயும் சுவையிலயும் இதை செய்யலாம்.
35
ரவை தரமானதா இருக்கணும்
உப்மா ருசியா இருக்கணும்னா முதல்ல நல்ல தரமான ரவையை வாங்கணும். கடையில விலை கம்மியா இருக்குன்னு தரமில்லாத ரவையை வாங்குனா உப்மா எப்படி ருசியா இருக்கும்? அதனால நல்ல தரமான ரவையை வாங்குங்க. உப்மா செய்றதுக்கு முன்னாடி, ரவையை ஒரு கடாயில போட்டு மிதமான தீயில சில நிமிஷங்கள் வறுத்துக்கோங்க. எண்ணெய், நெய் எதுவும் சேர்க்க வேண்டாம், வெறும் ரவையை மட்டும் வறுத்தா போதும். கொஞ்ச நேரத்துல நல்ல வாசனை வரும். ரவையோட நிறம் மாறுற வரைக்கும் வறுக்க தேவையில்லை. இப்படி முதல்லயே வறுக்குறதால உப்மா பிசுபிசுன்னு ஒட்டாம வரும். அதுமட்டுமில்லாம உப்மா சரியான பதத்துல வேகும்.
இப்போ ஒரு சின்ன கடாயில எண்ணெய் அல்லது நெய் ஊத்தி சூடாக்குங்க. சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பச்சை பட்டாணி, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளிச்சுக்கோங்க. இதுகூடவே பொடியா நறுக்குன வெங்காயத்தை சேர்த்து, அது மென்மையாகுற வரைக்கும் நல்லா வதக்குங்க. நீங்க குழந்தைகளுக்கு உப்மா செய்றீங்கன்னா பச்சை மிளகாயை கம்மியா சேர்த்துக்கோங்க. காரம் அதிகமாயிடுச்சுன்னா குழந்தைங்க உப்மா பக்கமே வரமாட்டாங்க. காரம் கம்மியா இருக்கட்டும். சுவையையும் சத்தையும் கூட்ட பொடியா நறுக்குன கேரட், பட்டாணி, குடைமிளகாய் மாதிரியான காய்கறிகளையும் நீங்க சேர்த்துக்கலாம்.
55
இதுதான் முக்கியம்
உப்மா செய்றதுல ரொம்ப முக்கியமான விஷயம் தண்ணி-ரவை அளவை சரியா சேர்க்குறது தான். சாஃப்டான உப்மா வேணும்னா ஒரு கப் ரவைக்கு ரெண்டு அல்லது மூணு கப் தண்ணி சேர்த்தா உப்மா உதிரி உதிரியா வரும். உங்களுக்கு கொஞ்சம் குழைவா வேணும்னா இன்னும் கொஞ்சம் தண்ணி சேர்த்துக்கலாம். மேலே சொன்ன மாதிரி தாளிச்ச பிறகு, தண்ணி சேர்த்து கொதிக்க விடுங்க. அப்புறம் ரவையை சேர்த்து கைவிடாம கிளறிக்கிட்டே இருங்க. இப்படி செய்றதால உப்மா கட்டி தட்டாம இருக்கும். இப்போ உப்மா ரெடியானதும் சுவையை இன்னும் கூட்ட கொஞ்சம் நெய் சேர்த்துக்கலாம். குழந்தைகளுக்கு பார்க்க அழகா இருக்கணும்னா, கொத்தமல்லி தழை, கேரட், பட்டாணி, முந்திரி சேர்த்தா அவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.