மரவள்ளிக்கிழங்கு வீட்டில் இருக்கிறதா? வழக்கமாக வேகவைத்து சாப்பிடுவதற்குப் பதிலாக, கேரளாவின் பாரம்பரிய உணவான கப்பா புழுக்கு செய்து பாருங்கள். தேங்காயின் மணம், சின்ன வெங்காயத்தின் சுவை, பச்சை மிளகாயின் காரம், தேங்காய் எண்ணெயில் தாளித்த கருவேப்பிலையின் வாசனை என ஒவ்வொரு கவளத்திலும் அசத்தலான சுவையைத் தரும் இந்த உணவு, எளிமையான சமையலை விரும்புபவர்களுக்கு ஏற்றது.
கேரளாவில் மரவள்ளிக்கிழங்கு கப்பா என்று அழைக்கப்படுகிறது. அதைத் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து மசித்து, தேங்காய் எண்ணெயில் தாளித்துச் செய்யப்படும் இந்த உணவு, மீன் குழம்பு அல்லது காரமான குழம்புடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குறைந்த பொருட்கள், எளிமையான செய்முறை, நிறைவான சுவை என வீட்டிலேயே கேரளா ஸ்டைல் கப்பா புழுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- மரவள்ளிக்கிழங்கு (கப்பா) - 1 கிலோ
- துருவிய தேங்காய் - 1 கப்
- சின்ன வெங்காயம் - 6 முதல் 8
- பச்சை மிளகாய் - 4 முதல் 5
மசாலா மற்றும் தாளிக்க
- சீரகம் - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1\2 தேக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- கருவேப்பிலை - சிறிதளவு
- தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு