வயிற்றில் பிரச்சினை? செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க மறக்காம இந்த உணவுகளை சாப்பிடுங்க..!!

Published : Jul 25, 2023, 11:47 AM ISTUpdated : Jul 25, 2023, 11:52 AM IST

இத்தொகுப்பில் நாம் செரிமான மண்டலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க என்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

PREV
15
வயிற்றில் பிரச்சினை? செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்க மறக்காம இந்த உணவுகளை சாப்பிடுங்க..!!

இக்காலகட்டத்தில் பெரும்பாலானோர் வாரத்திற்கு ஒருமுறையாவது கடைகளில் சப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் அவர்களது செரிமான மண்டலம் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக வாயு, அஜீரணம்  போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, இப்பிரச்சினையில் இருந்து விடுபட நீங்கள் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக நீங்கள் வீட்டில் சமைத்த உணவுகள் மற்றும் பச்சை காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும். இதனால் உங்களது செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, உங்களுக்கு உதவுக்கூடிய சில உணவுகள் இங்கே உள்ளன.

25

தயிர்
தயிர் செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. இது நோய்த் தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. மேலும் வயிற்றின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், செரிமான மண்டலத்தை வலுப்படுத்தவும் தயிர் உதவுகிறது. குறிப்பாக இது வாயு சார்ந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

இதையும் படிங்க: வீட்டில் உள்ள இந்த 4 பொருட்களை வைத்தே, செரிமான பிரச்சனைகளை தவிர்க்கலாம்..

35

பப்பாளி
இது பல்வேறு நோய்களை தீர்க்கும் ஒரு அருமருந்து ஆகும். இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இது, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாகும். மற்றும் இது செரிமான மண்டலத்திற்கு நன்மை பயக்கிறது. குறிப்பாக பப்பாளில் வயிறு சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

45

ஆப்பிள்
இதில் புரதம் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு ஏராளமான நன்மைகளை தருகிறது. ஆப்பிள் உடல் எடையை குறைக்கவும், செரிமான மண்டலம் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. குறிப்பாக இது ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இதையும் படிங்க: உங்களுக்கு ஃபுட் பாய்சன் ஆகுதா? உடனே இதை பண்ணுங்க..!!

55

சோம்பு
இது சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருளாகும். இதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. பல்வேறு நற்பண்புகள் நிறைந்துள்ள இது வாயு பிரச்சனைகளை நீக்கவும், செரிமான மண்டலத்தை வலுப்படுத்தவும் மற்றும் குடல் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்கவும் உதவுகிறது. சோம்புவில் வைட்டமின் டி உள்ளது. இது கண் பார்வைக்கு மிகவும் நல்லது. குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புவோர் சோம்பு டீ அருந்தலாம்.

click me!

Recommended Stories