தயிர் வைத்து ஸ்வீட் செய்துள்ளீர்களா?இல்லையா? அப்போ ஸ்ரீகண்ட் ஸ்வீட் செய்யலாம் வாங்க!

First Published | Mar 4, 2023, 10:14 PM IST

குஜராத்தில் மிகவும் புகழ் பெற்ற ஸ்ரீகண்ட் இனிப்பு ரெசிபியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இன்றைய பதிவில் நாம் காண உள்ளோம்

பிறந்த நாள், திருமண நாள் அல்லது பண்டிகை நாட்கள் போன்ற விஷேச தினங்களுக்கு நாம் பெரும்பாலும் பலகார கடைகளில் இருந்து இனிப்பு களை வாங்கி சுவைப்போம். அல்லது வீட்டிலேயே கேசரி, க்ளோப் ஜாமுன் போன்ற இனிப்பு வகைகளை செய்து சாப்பிடுவோம். இதனையே செய்து சலித்து போனவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். ஏன்னெனில் இன்று நாம் இனிப்பு ரெசிபியை தான் பார்க்க உள்ளோம்.

தீபாவளி,ஆயுத பூஜை போன்ற விழாக் காலங்களில் அதிரசம், லட்டு போன்றவற்றை வீட்டில் செய்து சுவைத்து இருப்போம். கலாகந்த், தூத் பெடான் போன்ற இனிப்பு வகைகளை வெளியில் இருந்து வாங்கி சுவைத்து இருப்போம். இன்று நாம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு இனிப்பு வகையை செய்ய உள்ளோம்

இந்த இனிப்பு குஜராத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு இனிப்பு வகை ஆகும்.குஜராத்தின் அனைத்து விஷேச தினங்களிலும், உணவகங்களிலும் மதிய உணவில் இடம் பெரும். என்ன ஸ்வீட் என்று யோசிக்கிறீர்களா? குஜராத்தில் மிகவும் புகழ் பெற்ற ஸ்ரீகண்ட் இனிப்பு ரெசிபியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இன்றைய பதிவில் நாம் காண உள்ளோம்.

தேவையான பொருட்கள்:

கெட்டி தயிர் - 1/2 லிட்டர்
சர்க்கரை - 1/4 கப்
பாதாம் -10
முந்திரி - 10
பிஸ்தா - 10
ஏலக்காய் - 2
ஜாதிக்காய் பூ - 2

பத்து நிமிஷத்தில பக்கத்து வீடு வரை மணக்கும் மஷ்ரூம் மஞ்சூரியன்!

செய்முறை:

முதலில் கெட்டி தயிரை ஒரு காட்டன் துணியில் சேர்த்து நன்றாக அதாவதுமுழுவதுமாக கவர் செய்து ஒரு பாத்திரத்தில்  வடிகட்டி கொள்ள வேண்டும். இவ்வாறு 2 மணி நேரம் வரை வைத்து வடிகட்டி கொள்ள வேண்டும்

Latest Videos


நட்ஸ் வகைகளான முந்திரி, பாதாம்,பிஸ்தா ஆகியவற்றை ஒன்றுக்கு இரண்டாக உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் பூவை ஒன்றிரண்டாகபொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது பாத்திரத்தில் இருக்கும் வடிகட்டிய தயிரில் பொடித்து வைத்துள்ள சர்க்கரை சேர்த்து விஷ்க் வைத்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். அடுத்தாக அதில் உடைத்து வைத்துள்ள நட்ஸ்களான முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை சேது நன்றாக மிக்ஸ் செய்து விட வேண்டும்.

பின் ஏலக்காய்த் தூள் மற்றும் ஜாதிக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு பிரிட்ஜில் சுமார் 2 மணி நேரம் வரை வைத்து விட வேண்டும். 2 மணி நேரத்திற்கு பிறகு பிரிட்ஜில் இருந்து எடுத்து சின்ன பௌல்களில் வைத்து அதன் மேல் பொடித்து வைத்துள்ள சில முந்திரி மற்றும் பாதாம் தூவி பரிமாறினால் குஜராத் ஸ்பெஷல் ஸ்வீட் ரெடிநீங்களும் இந்த எளிமையான ஸ்வீட் ரெசிபியை வீட்டில் ஒரு முறை ட்ரை செய்து அசத்துங்க.

click me!