இப்போது மற்றொரு பௌலில் மைதா,கார்ன் பிளார், உப்பு, மிளகுத்தூள் மற்றும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி சற்று கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் மஷ்ரூம்களை மைதா கலவையில் பிரட்டி எடுத்து கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு தீயினை சிம்மில் வைத்து பொன்னிறமாக பொரித்து, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் மற்றொரு கடாய் வைத்து, அதில் சிறிது எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்த பின்னர் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்துவதக்கி விட்டு பின் அதில் அரிந்து வைத்துள்ள ஸ்பிரிங் ஆனியன் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி விட வேண்டும்.
இப்போது தயார் நிலையில் உள்ள சாஸ் கரைசலை சேர்த்து சிறிது உப்பு தூவி சற்று கெட்டியாக மாறும் வரை கிளறி விட வேண்டும். கெட்டியாக மாறிய பின்,பொரித்து வைத்துள்ள மஷ்ரூம்களை சேர்த்து நன்றாக கிளறி விட்டு இறுதியாக மல்லித்தழை சிறிது தூவி பரிமாறினால் அட்டகாசமான மஷ்ரூம் மஞ்சூரியன் ரெடி!