Nungu Payasam: அடிக்கும் வெயிலுக்கு செம கூல் ட்ரீட்! நுங்கு பாயாசம் செய்வது எப்படி?

Published : Sep 27, 2026, 03:24 PM IST

Nungu Payasam: வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் ஒரு ஸ்பூன் நுங்கு பாயாசம். சுவையில் இனிப்பு, நுங்கின் தனித்துவமான சுவையுடன் வீட்டிலேயே செய்யக்கூடிய சூப்பர் சம்மர் டெசர்ட்டை எப்படி செய்வது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
நுங்கு பாயாசம்

அடிக்கும் வெயிலுக்கு உடலுக்கும் மனதுக்கும் இதமாக ஏதாவது குளிர்ச்சியாக குடிக்க வேண்டும் என்று தோன்றுகிறதா? அப்படியானால், சீசனில் கிடைக்கும் நுங்கை வைத்து வீட்டிலேயே சுவையான நுங்கு பாயாசம் செய்து பாருங்கள். மென்மையான நுங்கு, பால், ஏலக்காய், நாட்டு சர்க்கரை அல்லது வெல்லம் ஆகியவற்றின் சேர்க்கையில் தயாராகும் இந்த பாயாசம், இனிப்புடன் நுங்கின் தனித்துவமான சுவையையும் கொடுக்கும்.

குறிப்பாக வெயிலில் அலைந்து வந்த பிறகு குளிர்ச்சியாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நுங்கு பாயாசம் ஒரு சுவையான தேர்வாக அமையும்.

25
தேவையான பொருள்கள்
  • நுங்கு 8 -10
  • பால் 500 மி.லி
  • வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை 100 - 150 கிராம்
  • ஏலக்காய் 2 - 3
  • முந்திரி 8 -10
  • திராட்சை 1 டேபிள்ஸ்பூன்
  • நெய் 1 டீஸ்பூன்
  • குங்குமப்பூ சிறிதளவு, விருப்பப்பட்டால்
  • தேங்காய்ப்பால் 1\2 கப், விருப்பப்பட்டால்
35
நுங்கு பாயாசம் செய்வது எப்படி?
  • முதலில் நுங்கின் தோலை நீக்கி, சுத்தமான தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். இதில் பாதி நுங்கை சிறிய துண்டுகளாக வைத்துக்கொண்டு, மீதியை அரைத்துக்கொள்ளவும். அரைத்து சேர்த்தால் பாயாசம் கெட்டியாகவும், நுங்கின் சுவை நன்றாகவும் இருக்கும்.
  • ஒரு பாத்திரத்தில் 500 மி.லி. பாலை ஊற்றி மிதமான தீயில் நன்றாக காய்ச்சவும். பால் சிறிது சுண்டியதும் அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும்.

வெல்லத்தை தனியாக சிறிதளவு தண்ணீர் சேர்த்து சூடாக்கி கரைத்துக்கொள்ளலாம். பின்னர் அதை வடிகட்டி, பாலில் சேர்க்கவும்.

முக்கியம்: பால் மிகவும் கொதித்துக்கொண்டிருக்கும்போது வெல்லத்தை நேரடியாக சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் சில சமயங்களில் பால் திரியக்கூடும்.

45
நுங்கை நீண்ட நேரம் கொதிக்க வைக்க வேண்டாம்
  • ஏலக்காயை பொடித்து பாயாசத்தில் சேர்க்கவும். விருப்பப்பட்டால் சிறிதளவு குங்குமப்பூவையும் சேர்க்கலாம். இதனால் பாயாசத்திற்கு நல்ல வாசனையும் சுவையும் கிடைக்கும்.
  • இப்போது நறுக்கிய நுங்கை சேர்த்து மெதுவாக கிளறவும். நுங்கை நீண்ட நேரம் கொதிக்க வைக்க வேண்டாம். அதன் இயற்கையான மென்மையும், சுவையும் மாறாமல் இருக்க இறுதியில் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் மட்டும் சூடாக்கினால் போதும்.
  • ஒரு சிறிய வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்துக்கொள்ளவும். இதை பாயாசத்தில் சேர்த்து நன்றாக கிளறவும்.
55
தேங்காய்ப்பால் சேர்த்தால் கூடுதல் சுவை
  • பால் அளவை சிறிது குறைத்து 1\2 கப் கெட்டியான தேங்காய்ப்பால் சேர்த்தால் நுங்கு பாயாசத்திற்கு தேங்காயின் மணமும் தனித்துவமான சுவையும் கிடைக்கும்.
  • ஆனால் தேங்காய்ப்பாலை சேர்த்த பிறகு அதிகமாக கொதிக்க விடாமல், மிதமான சூட்டில் சிறிது நேரம் மட்டும் வைத்து இறக்குவது நல்லது.
  • பாயாசத்தை அடுப்பில் இருந்து இறக்கியதும் ஆரவைத்து, பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக பரிமாறலாம்.
  • நுங்கில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால் வெயில் காலத்தில் பலரும் அதை விரும்பி சாப்பிடுகின்றனர்.
Read more Photos on
click me!

Recommended Stories