ஒரு கனமான அடிப்பகுதியுள்ள நான்-ஸ்டிக் பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். முதல் கொதி வந்ததும், தீயை மிகக் குறைத்து விடவும். தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும். பாத்திரத்தின் ஓரங்களில் படியும் பால் ஆடையை ஒரு ஸ்பூன் கொண்டு வழித்து மீண்டும் பாலுடன் சேர்க்கவும். இந்த ஆடையில்தான் குல்ஃபியின் உண்மையான சுவை இருக்கிறது.பால் மூன்றில் ஒரு பங்காக சுண்டும் வரை காய்ச்சவும். பால் நன்றாக சுண்டியதும், சர்க்கரையைச் சேர்க்கவும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு அல்லது சோள மாவை சிறிது (2-3 தேக்கரண்டி) குளிர்ந்த நீரில் கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளவும். பிரெட் தூள் பயன்படுத்துவதாக இருந்தால், அதை நேரடியாக பாலில் சேர்க்கலாம்.
கரைத்து வைத்த மாவு கரைசலை கொதிக்கும் பாலில் மெதுவாக ஊற்றவும். ஊற்றும் போது ஒரு கையால் தொடர்ந்து கிளறவும். கலவை லேசாக கெட்டியாகும் வரை (சுமார் 2-3 நிமிடங்கள்) குறைந்த தீயில் கிளறவும்.
பின்னர் ஊறவைத்த குங்குமப்பூ, ஏலக்காய் தூள், பொடியாக நறுக்கிய பிஸ்தா, பாதாம், முந்திரி மற்றும் விருப்பமான உலர் திராட்சை போன்றவற்றைபாலில் சேர்க்கவும்.அனைத்தையும் நன்றாக கலந்து, அடுப்பை அணைத்துவிட்டு பால் கலவையை அறை வெப்பநிலைக்கு வரும் வரை முழுமையாக ஆற விடவும்.